அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்</strong></p>
<p>அறந்தாங்கி, பிப்.17- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் கணேஷ்குமார் தலைமையில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பை புறக்கணித்து, கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். யுசிஜி நிர்ணயித்த ரூ.57,700-ஐ கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடைவழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.</p>
