தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இரவு நேரங்களில் அழகாபுரிக்குள் வராத அரசு பேருந்துகள்

5 Jun 2026, 1:41 am
இரவு நேரங்களில் அழகாபுரிக்குள் வராத அரசு பேருந்துகள்

இரவு நேரங்களில் அழகாபுரிக்குள் வராத அரசு பேருந்துகள்

​​​​​​​திருவில்லிபுத்தூர், ஜூன் 4- மதுரை – திருமங்கலம் – கல்லுப்பட்டி – ஸ்ரீவில்லிபுத்தூர் – இராஜபாளையம் – செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகாபுரி கிராமத்திற்கு இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் உள்ளே வராததால், பயணிகளின் பாது காப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பயணிகள் வட்டார போக்கு வரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அழகாபுரி, தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் அமைந்துள்ள பெரிய கிரா மங்களில் ஒன்றாகும்.

இதனால் அப்பகுதி மக்கள் மதுரை, சென்னை, கோயம்புத் தூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எந்த நேரத்திலும் பயணம் மேற்கொள்ளும் வசதி பெற் றுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக மதுரையிலி ருந்து கல்லுப்பட்டி, அழகாபுரி வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டை செல்லும் பேருந்துகளும், செங்கோட்டையிலிருந்து திருவில்லிபுத்தூர், அழகாபுரி வழியாக மதுரை செல்லும் பேருந்துகளும் இயக்கப் பட்டு வருகின்றன.

பகல் மற்றும் மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து கள் அழகாபுரி கிராமத்திற்குள் சென்று பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன.

ஆனால், இரவு 9 மணிக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிராமத்திற் குள் வராமல், தேசிய நெடுஞ்சாலையி லேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்வ தாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் வேகமாக இயங்கும் வாகனங்களுக்கு இடையே சாலையைக் கடந்து கிராமத்திற் குள் செல்ல வேண்டிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால், சாலையைக் கடப்பதில் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

கவனக் குறைவால் விபத்துகள் ஏற்பட்டு உயிரி ழப்பு சம்பவங்களும் நிகழக்கூடிய அபா யம் இருப்பதாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு 11 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற பயணி ஒருவர் வேகமாக வந்த வாகனத்தி லிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவ மும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உட னடியாக தலையிட்டு, மதுரை மற்றும் திரு நெல்வேலி மண்டலங்களைச் சேர்ந்த அனைத்து அரசு பேருந்துகளும் இரவு நேரங்களிலும் அழகாபுரி கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.