தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்: போதை ஆசாமிகள் இருவர் கைது

8 Jun 2026, 1:17 am
அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்: போதை ஆசாமிகள் இருவர் கைது
<p><strong>அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்: போதை ஆசாமிகள் இருவர் கைது</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூன் 7- ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநர்கள் மற்றும் பயணியைத் தாக்கிய வழக்கில் தப்பியோடிய இருவரை மத்திகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 5-ஆம் தேதி மாலை, சின்ன பேலகொண்டப்பள்ளி அருகே மதுபோதை யில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமி கள் பேருந்தின் குறுக்கே நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் முருகன் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்துக்குள் புகுந்து முருகனைத் தாக்கினர். அப்போது அங்கு வந்த மற்றொரு அரசுப் பேருந்தின் ஓட்டுநரும், சிஐடியு மாவட்டத் தலைவருமான பெருமாள் மற்றும் பேருந்திலிருந்த பயணி ஒருவர் தட்டிக்கேட்டபோது அவர்களையும் போதை ஆசாமிகள் கடுமையாகத் தாக்கினர். காய மடைந்த மூவரும் ஓசூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளி களை உடனே கைது செய்ய வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சிஐடியு கிளைத் தலைவர் சரவ ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்பிஎஃப் அண்ணா மலை, ஏஐடியூசி பாலாஜி, ஏஏஎல்டிசி முருகானந்தம், சிஐடியூ ரவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை யடுத்து, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி யோடிய ஜெகதீஷ், கனகராஜ் ஆகிய இரு வரைக் கைது செய்தனர்; விஜயகுமார் என்பவரைத் தேடி வருகின்றனர். இதற்கி டையே, மருத்துவமனையில் உள்ளவர்க ளைச் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.ஸ்ரீதர், கமிட்டி உறுப்பினர் விக்னேஷ் ஆகி யோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.