தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சக பெண் நடத்துநரை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர் மீது வழக்கு

14 Jul 2026, 10:03 pm
சக பெண் நடத்துநரை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர் மீது வழக்கு

சக பெண் நடத்துநரை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர் மீது வழக்கு

இராமநாதபுரம், ஜூலை 14- இராமநாதபுரத்தில் அரசு பெண் பேருந்து நடத்துநரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக மற்றொரு அரசு பேருந்து நடத்துநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பர மக்குடி அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்த இந்துமதி (30), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இராமநாதபுரம் புறநகர் பணிமனை யில் நடத்துநராக பணியாற்றி வரு கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இராம நாதபுரம் புதிய பேருந்து நிலையத் தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பணியில் இருந்த போது, மதுரையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் யோகராஜ் (30) தனது குடும்பத்துடன் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது இந்து மதி டிக்கெட் கேட்டதற்கு, தானும் அரசு பேருந்து நடத்துநர்தான் என அடையாள அட்டையின் நகலை யோகராஜ் காட்டியதாக கூறப்படு கிறது.

பின்னர் அவரது மனைவிக்கு டிக்கெட் எடுக்குமாறு இந்துமதி கேட்டதால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அதன் பின் னர் யோகராஜ் டிக்கெட் எடுத்ததாக வும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள் ளிக்கிழமை மாலை அலுவலகப் பணிக்காக இராமநாதபுரம் நகர் பணி மனையிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல இந்துமதி பேருந்தில் ஏற முயன்றார்.

அப் போது அந்த பேருந்தின் நடத்துநராக இருந்த யோகராஜ், அவரை பேருந் தில் ஏறவிடாமல் படிக்கட்டில் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஆபாசமாக திட்டி, நெஞ்சில் மிதித்து கீழே தள்ளியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இந்துமதி, நெஞ்சு வலியால் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இந்துமதி அளித்த புகாரின் பேரில், இராமநாதபுரம் நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து, யோகராஜை தேடி வருகிறார்.

இதனையடுத்து, செவ்வாய்க் கிழமை சிகிச்சை பெற்று வரும் இந்து மதியை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.லட்சுமி, மாவட்டச் செயலா ளர் ஏ.ஆரோக்கிய நிர்மலா, மாவட்ட துணைத் தலைவர் இ.கண்ணகி மற்றும் சிபிஎம் கடலாடி கிழக்கு தாலுகா குழுச் செயலாளர் எஸ். ராமசாமி ஆகியோர் மருத்துவ மனையில் நேரில் சந்தித்து நலம் விசா ரித்தனர்.

பின்னர், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இராமநாதபுரம் புறநகர் பணிமனை கிளை மேலாளரிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.