முந்தய பக்கம்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்து

7 Jun 2026, 12:21 am
கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்து
<p><strong>கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்து</strong></p><p>நாமக்கல், ஜூன் 6- குமாரபாளையம் அருகே பாறையூர் பகுதி யில் அரசு பேருந்து ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் 20-க்கும் மேற்பட்ட பயணி கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து குமாரபாளை யம் நோக்கி சுமார் 45 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டு நர் சௌந்தரராஜன் சனியன்று காலை இயக்கி வந்தார். பேருந்து பாறையூர் பகுதியில் வந்தபோது திடீரென என்ஜின் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து சாலையின் வளைவில் உள்ள வாய்க்கால் சுவரில் மோதி அருகிலிருந்த விவசாய நிலப் பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த குமாரபாளை யம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டு, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அலுவலர் பாரதி தலைமையிலான மருத்து வக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram