அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம்
11 May 2026, 12:06 am
<p><strong>அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம்</strong></p><p>கோவை, மே 10– தென்னம்பாளையம் பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில், 16 பயணிகள் காயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. தென்னம்பாளையம் அருகே சனியன்று இரவு வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட் டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. அக் கம் பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அவ சர ஊர்தி ஊழியர்கள், காயமடைந்தவர் களை மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் சூலூர் பகுதிகளிலுள்ள மருத்துவமனைக ளுக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் ஈரோடு - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>
