முந்தய பக்கம்

அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

13 Feb 2026, 5:58 pm
அரசு கலைக்கல்லூரி கௌரவ  விரிவுரையாளர்கள் போராட்டம்
<p><strong>அரசு கலைக்கல்லூரி கௌரவ &nbsp;விரிவுரையாளர்கள் போராட்டம்</strong></p> <p>உதகை, பிப்.13- யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கெளரவு விரிவுரையாளர்கள் கூட்ட மைப்பு சார்பில், யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க &nbsp;வேண்டும். கெளரவ விரிவுரையாளர்களுக்கு பிஎப்., இ எஸ்ஐ., வழங்க வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஒய்வு பெறும் விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி கெளரவ விரிவுரையாளர்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கின்ற போராட்டத்தை வாழ்த்தி, &nbsp;மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க &nbsp;நிர்வாகிகள் உரையாற்றினர். இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வர்கீஸ், கூடலூர் ஏரியா செயலாளர் எம்.ஆர். சுரேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் இராசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போன்று, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram