தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குறுதி

9 Apr 2026, 5:30 am
அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குறுதி

அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.8- பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை மையப்படுத்தி அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குறுதி அளித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் பி.பழனியப்பன் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொம்மிடிபுரம் பேரூராட்சி, திப்பரெட்டி அள்ளி, கொண்டார அள்ளி ஊராட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் இல்லை. இந்த கிராமங்களில் ஓராண்டுக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில கிராமங்களில் மயான வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்குத் தேவையான பயிர் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியை மையப்படுத்தி அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.