மதச் சிறுபான்மையினரை தாக்கும் குண்டர்கள்; வங்கதேச இடைக்கால அரசே பொறுப்பு! ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
22 Dec 2025, 2:53 pm
<p><strong>மதச் சிறுபான்மையினரை தாக்கும் குண்டர்கள்; வங்கதேச இடைக்கால அரசே பொறுப்பு! ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு</strong></p>
<p>புதுதில்லி, டிச. 22 - வங்கதேசத்தில், இந்திய தூதர கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசாங்கமே முழுப் பொறுப்பு என்று, இந்தியாவில் தங்கியிருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்பு களின் போராட்டத்தை தொடர்ந்து பிரத மர் ஷேக் ஹசீனா பதவி விலகி, இந்தியா வில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை யடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தூண்டிவிடப்பட்டு, இந்திய தூதரகத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இதுதொடர்பாகவே ஷேக் ஹசீனா பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘தற்போது ஏற்பட்டுள்ள சிக்க லுக்கு முழுப் பொறுப்பு முகமது யூனுஸ் தான். அவரது அரசாங்கம் இந்தியா வுக்கு எதிராக வன்மத்துடன் அறிக்கை களை வெளியிடுகிறது. அதோடு, வங்க தேசத்தில் உள்ள மதச் சிறுபான்மை யினரைப் பாதுகாக்கத் தவறுகிறது. தீவிர வாதிகள் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்க யூனுஸ் அரசாங்கம் அனு மதிக்கிறது. இந்தியா உடனான விரோதப் போக்கு, யூனுஸ் ஆட்சியால் தூண்டப் பட்ட தீவிரவாதிகளால் உருவாக்கப் படுகிறது. இவர்கள்தான் இந்திய தூதரகத்துக்கு எதிராக போராட்டங் களை நடத்தியவர்கள். ஊடக அலுவல கங்களை தாக்கியவர்கள். சிறுபான்மை யினரைத் தாக்கியவர்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் உயிருக்குப் பயந்து தப்பி ஓடச் செய்தவர்கள். யூனுஸ் அரசாங்கம் குண்டர்களுக்குப் பாது காப்பு அளித்து அவர்களை போராளி கள் என்று அழைக்கின்றனர்.’’ இவ்வாறு ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.</p>
