தொழில்நுட்ப கதிர்
24 Jul 2026, 9:37 pm

கூகுளின் புதிய “செல்பி வீடியோ” வசதி அறிமுகம்!

பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை பாதுகாப்பாக மீட்டெடுக்கவும், பாஸ்வேர்டு (Pass word) இல்லாத எளிமையான உள் நுழைவு வசதியை வழங்கவும், “செல்பி வீடியோ” (Selfie Video) எனும் புதிய வசதியை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது. மொபைல் போன் தொலைந்து போவது, பாஸ்கீ (Passkey) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சாதனத்தை அணுக முடியாத நிலை, பாஸ்வேர்டு அல்லது பேக்கப் கோட் (Backup Code) கிடைக்காத சூழ்நிலை போன்றவற்றில், இந்த செல்பி வீடியோ கூகுள் கணக்கை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்த முதலில் கூகுள் கணக்கில் சில அமைப்புகளை (Settings) முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கேமரா முன் முகத்தைக் காட்டி, கூகுள் கூறும் சில வழிமுறைகளின்படி தலை அசைவுகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் முகத்தின் பல் வேறு கோணங்களை கூகுள் பதிவு செய்து கொள்ளும். இருப்பினும், செல்பி வீடியோவை அடிப்படையாகக் கொண்ட கணக்கு மீட்பு முறையில் பாதுகாப்பு சவால் களும் உள்ளன. குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க ப்படும் டீப்பேக் (Deepfake) வீடி யோக்கள் குறித்து கவலைகள் எழு கின்றன. இதனைத் தடுப்பதற்காக, “Live ness Detection” உள்ளிட்ட பாது காப்புத் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம், பயனர் உண்மையில் கேமரா முன் இருக் கிறாரா அல்லது பழைய புகைப்படம் அல்லது செயற்கையாக உரு வாக்கப்பட்ட வீடியோ பயன்படுத்தப் படுகிறதா என்பதை கண்டறியும். மேலும், பயனர்களின் செல்பி வீடியோ குறியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) நிலையில் சேமிக்கப்படும் என்றும், பயனர்கள் அதை எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் கணக்கில் செல்பி வீடியோ வசதியை அமைப்பது எப்படி?

1. உங்கள் மொபைலில் கூகுள் செயலி அல்லது குரோம் ப்ரவுசரை திறக்கவும். 2. மேல் வலது மூலையில் உள்ள உங்கள் Profile Icon-ஐ கிளிக் செய்யவும். 3. “Manage your Google Account” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 4. மேலே உள்ள மெனுவில் “Security” என்ற பகுதிக்குச் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து, “How you sign in to Google” அல்லது “Identity Verification” என்ற பிரிவைக் கண்டறியவும். 5. அதில் “Selfie Video” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.(அல்லது மொபைல் உலாவியில் நேரடியாக g.co/signin-selfie என்ற இணைப்பிற்குச் செல்லலாம்). 6. உங்கள் கணக்கின் பாதுகாப்பிற்காக, கூகுள் மீண்டும் உங்களது Password அல்லது மொபைலின் Fingerprint / Screen Lock கேட்கும். அதை உள்ளிடவும். 7. அடுத்து, கூகுள் உங்கள் மொபைல் கேமராவைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். “Allow” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 8. கூகுள் காட்டும் வழிகாட்டுதல்களின்படி தலையை வெவ்வேறு கோணங்களில் அசைத்து ஒரு சிறிய செல்பி வீடியோவைப் பதிவு செய்ய வேண்டும்.

சீனாவின் கிமி கே3 ஏஐ-க்கு அதிக வரவேற்பு புதிய பயனர் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்

சீன ஏஐ நிறுவனமான மூன்ஷாட் ஏஐ, தனது புதிய கிமி கே3 (Kimi K3) செயற்கை நுண்ணறிவு மாடலுக்கு எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வரவேற்பு கிடைத்ததால், புதிய சந்தாக்கள் மற்றும் பயனர் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த ஜூலை 16, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிமி கே3 ஏஐ மாடலை அதிகப்படியான பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், நிறுவனத்தின் GPU கணினி திறன் கடுமையாக அழுத்தத்திற்கு உள்ளான தாகவும், தற்போதுள்ள பயனர்களின் சேவை பாதிக்கப் படாமல் இருக்க, புதிய சந்தாக்களை தற்காலிகமாக நிறுத்தப் பட்டு, தற்போதைய உறுப்பினர்களுக்கு கணினி வளங்களை முன்னுரிமையுடன் வழங்குவதாகவும் மூன்ஷாட் ஏஐ (Moonshot AI) தெரிவித்துள்ளது. மேலும், கணினி வளங் களைச் சிறப்பாக நிர்வகிக்க, பொதுப் பயன்பாட்டிற்கான Kimi Membership மற்றும் நிரலாக்கப் பணிகளுக்கான Kimi Code Membership என உறுப்பினர் திட்டங்களைப் பிரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது Kimi K3-இன் முழுமையான Open-Weight பதிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், ஜூலை 27 அன்று முழுமையான பயிற்சி பெற்ற Open-Weight பதிப்பை வெளியிட Moonshot AI திட்டமிட்டுள்ளது. அது வெளியிடப்பட்டால், டெவலப்பர்கள் மாடலை பதிவிறக்கம் செய்து, இயக்கவும், மாற்றியமைக்கவும், தங்கள் சொந்த ஏஐ பயன்பாடுகளை உருவாக்கவும் முடியும்.