இந்தியாவில் பெருமளவிலான பணிநீக்கங்கள் இல்லைகூகுள் நிறுவனம் விளக்கம்
1 hour before
<p><strong>இந்தியாவில் பெருமளவிலான பணிநீக்கங்கள் இல்லைகூகுள் நிறுவனம் விளக்கம்</strong></p><p>இந்தியாவில் உள்ள தனது ‘கிளவுட்’ (Cloud) பிரிவில்பெருமளவிலான பணிநீக்கங்கள் நடைபெறுவதாக வெளியான செய்திகளைக் கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,“இந்தியாவில் எங்கள் நிறுவனம் பெரியஅளவில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும், கிளவுட் குழுக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சில பதிவுகளில் கூறப்பட்டிருந்தது. மேலும், ஊழியர்கள் ராஜினாமா செய்யஅல்லது பணிநீக்கத்தைஎதிர்கொள்ள 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதுதவறான தகவல் ஆகும். ஒரு சிறிய நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் சுமார் 30 பணியிடங்கள் மட்டுமே குறைக்கப்பட்டன” எனகூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பணியாளர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துப் பதிவிடும் ‘பிளை</p><p>ண்ட்’ (Blind) என்ற சமூக வலைதளத்தில் இந்த வதந்திகள் தொடங்கின. பெங்களூருவைச் சேர்ந்த கூகுள் ஊழியர் என்றுகூறிக்கொண்ட ஒரு பயனர், பெருமளவிலான பணிநீக்கங்கள், ராஜினாமா கெடு விதிக்கப்பட்டதாக அதில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
