தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தொழில்நுட்ப கதிர்

17 Jul 2026, 8:43 pm
​​​​​​​தொழில்நுட்ப கதிர்

கூகுள் குரோம் பயனர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை!

கூகுள் குரோம் ப்ரவுசரைப் பயன்படுத்தும் பயனர்களு க்கு அதிக ஆபத்து (High Severity) கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘இந்திய கணினி அவசர காலப் பதிலளிப்புக் குழு’ (CERT-In), விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் கூகுள் குரோமின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணினியில் உள்ள தரவுகளை, ஹேக்கர்கள் தூரத்திலிருந்தே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. CIVN-2025-0130 அறிவிப்பின் படி, விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் இயங்குதளங்களில் 137.0.7151.119/. 120 பதிப்புகளுக்கு முந்தைய குரோம் டெஸ்க்டாப் பதிப்புகளையும், லினக்ஸ் 137.0.7151.119 பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளிலும் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. குரோமின் உள்ளகக் குறியீட்டில் (internal code) உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளே, குறிப்பாக ‘Profiler’ தொகுதியில் உள்ள நினைவக மேலா ண்மைப் பிழை (memory manage ment error) மற்றும் V8 JavaScript இன்ஜினில் உள்ள ‘integer overflow’ ஆகியவையே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். விண்டோஸ் 137.0.7151.119, மேக் 137.0.7151.120 மற்றும் லினக்ஸ் 137.0.7151.119 ஆகிய சமீபத்திய நிலையான பதிப்பிற்கு குரோமை உட னடியாகப் புதுப்பிக்குமாறு பயனர் களை CERT-In அறிவுறுத்தியுள்ளது. குரோமை புதுப்பிக்க, பயனர்கள் குரோமை திறந்து, அதில் உள்ள மூன்று புள்ளி மெனுவிற்குச் (three-dot menu) செல்ல வேண்டும். அங்கிருந்து ‘Help’ மற்றும் பின்னர் ‘About Google Chrome’ ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தால். அந்தப் புதுப்பிப்பு தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்படும்.

நோட்புக் எல்.எம்-இன் பெயர் மாற்றம்!

கூகுள், அதன் ஆய்வு மற்றும் குறிப்பெடுக்கும் ஏஐ செயலி யான நோட்புக் எல்எம்-ஐ (NotebookLM) ஜெமினி நோட்புக் (Gemini Notebook) என பெயர் மாற்றம் செய்துள்ளது. ஜெமினி ஏஐ சேவைகளுடன் இதை மேலும் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றத்தை கூகுள் மேற்கொண்டுள்ளது. இந்த நோட்புக் எல்.எம் PDF, Word, Google Docs, இணையதள இணைப்பு கள், யூடியூப் வீடியோக்கள், ஆடியோ கோப்புகள், கூகுள் Slides உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பதி வேற்றிய தகவல்களை ஒரு சுருக்கமாக (Summary) செய்து தரும். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இந்த சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோட்புக் எல்எம்-ஐ (NotebookLM) ஜெமினி நோட்புக் (Gemini Notebook) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெமினி நோட்புக் -இல் Cloud Computer இணைப்பு சேர்க்கப்பட்டுள் ளது. இதன் மூலம் AI பாதுகாப்பான கிளவுட் சூழலில் குறியீடுகளை (code) எழுதவும், இயக்கவும் முடியும். இந்த வசதி தற்போது கூகுள் ஏஐ Ultra மற்றும் கூகுள் Workspace Business பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் AI Pro பயனர்களுக்கும் விரைவில் இணைய பதிப்பில் இந்த அம்சம் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

சீனாவின் புதிய ஏஐ மாடல் அறிமுகம்!

சீனாவைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான Moonshot AI, உலகின் மிகப்பெரிய திறந்த வடிவிலான (Open-weight) ஏஐ மாடல் கிமி கே3 (Kimi K3)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் முன்னணி ஏஐ மாடல்களுக்கு நெருக்கமான செயல்திறனை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.8 டிரில்லியன் பாராமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய Open-weight ஏஐ மாடலாக Kimi K3 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Open-weight மாடல் என்பதால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இதை பதிவிறக்கம் செய்து தங்களது சொந்த கணினி அல்லது சர்வர்களில் இயக்கவும், தேவைக்கேற்ப மாற்றியமைக்கவும் முடியும். மற்ற ஏஐ மாடல்களை ஒப்பிடும்போது Kimi K3-ஐ பயன்படுத்துவதற்கான செலவு குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.