தொழில்நுட்ப கதிர்
11 Jul 2026, 9:01 pm

தொழில்நுட்ப கதிர்

ஆண்ட்ராய்டு பேக்கப் கொள்கையில் மாற்றம்!

கூகுள் நிறுவனம் தனது து ஆண்ட் ராய்டு பேக்கப் (Android Backup) கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. முன்பு, ஆண்ட்ராய்டு போனை பேக்கப் செய்யும் போது, போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மட்டும்தான் பய னர்களின் இலவச 15GB கூகுள் கணக்கு ஸ்டோரேஜில் (Google Stora ge) சேமிக்கப்பட்டன. கூகுளின் புதிய விதியின்படி, ஜூலை 7ஆம் தேதி முதல் பயனர்களின் போனில் பேக்கப் ஆகும் அனைத்து தரவுகளும் இந்த 15GB கணக்கில் சேமிக்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் போன்ற உரையாடல்கள், அழைப்பு விவரங்கள், ஒய்.பை (Wi-Fi) பாஸ்வேர்டுகள், வால்பேப்பர், டிஸ்பிளே செட்டிங்ஸ் போன்றவை போன் செட்டிங்ஸ் (Device Settings), ஆப் மற்றும் ஆப் டேட்டா (App Data) ஆகிய தரவுகளும் கூகுளின் இலவச ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். இந்த தரவுகள் 40MB கூடுதல் இடத்தை மட்டுமே பயன்படுத்தும் என்று கூகுள் தெரிவித்தாலும், ஏற்கெனவே 15GB இலவச எல்லையை நெருங்கிவிட்ட பயனர்களுக்கு, இது ஸ்டோரேஜ் புல் (Storage Full) எச்சரிக்கையை காட்ட வாய்ப்புள்ளது. இந்த மாற்றத்துடன், எந்த வகை யான தரவுகளை பேக்கப் செய்ய வேண்டும் என்பதை பயனர்களே தேர்வு செய்யும் புதிய கட்டுப்பாடுகளையும் கூகுள் வழங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் போனில் உள்ள பேக்கப் செட்டி ங்ஸிற்குச் சென்று, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் அல்லது கால் ஹிஸ்டரி ஆகியவை பேக்கப் எடுக்க வேண்டாம் என்று நினைத்தால், அதற்கான Toggle சுவிட்சை ஆப் (Off) செய்து கொள்ளலாம்.

அட்லாஸ் ப்ரவுசர் சேவை நிறுத்தம் - ஓபன் ஏஐ அறிவிப்பு

கடந்த ஆண்டு அக்டோபரில் அறி முகப்படுத்தப்பட்ட ‘சாட் ஜிபிடி அட்லாஸ்’ (ChatGPT Atlas) ப்ரவுசர் (Browser) சேவையை நிறுத்துவதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ப்ரவுசரில் இருந்த முக்கிய அம்சங்கள் அனைத்தும் இனி சாட் ஜிபிடி-யின் புதிய டெஸ்க்டாப் செயலி மற்றும் கோடெக்ஸ் (Codex) தளங்களில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையப் பக்கங்களைச் சுருக்குவது, தகவல்க ளைத் தேடுவது, படிவங்களை நிரப்பு வது, பயனரின் சார்பில் சில இணையப் பணிகளை மேற்கொள்வது போன்ற பல செயற்கை நுண்ணறிவு வசதிகள் இதில் இடம்பெற்றிருந்தன. முதற்கட்ட மாக இந்த ப்ரவுசர் மேக் ஓ.எஸ் (MacOS) கணினிகளுக்காக மட்டுமே வெளியிடப்பட்டது. அட்லாஸ் ப்ரவுசர், வரும் ஆகஸ்ட் 9, 2026 முதல் முழுமையாக செயல் படாது என்றும், அதற்கு முன்பாக பயனர்கள் தங்களின் Bookmarks, சேமித்த இணையப் பக்கங்கள் மற்றும் தேவையான தகவல்களை ஏற்றுமதி (Export) செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஓபன் ஏஐ அறி வுறுத்தியுள்ளது.

கூகுள் போட்டோஸில் ‘வீடியோ ரீமிக்ஸ்’

கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் செயல்படும் புதிய ‘வீடியோ ரீமிக்ஸ்’ (Video Remix) அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ‘வீடியோ ரீமிக்ஸ்’ அம்சம் ஜெமினி ஆம்னி ஏஐ (Gemini Omni AI) மாதிரியை பயன்படுத்துகிறது. பயனர்கள் கூகுள் போட்டோஸின் ‘Create’ பிரிவில் இருந்து இந்த வசதியை பயன்படுத்தலாம். இதில், பின்னணி மற்றும் லைட்டிங் மாற்றம் (Background & Lighting), ஆர்ட்டிஸ்டிக் பில்டர்கள் (Artistic Filters), முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள எளிதான டெம்ப்ளேட்களை (Easy Templates) பயன்படுத்தி விரைவாக வீடியோவை எடிட் செய்யலாம். Text promptகளை பயன்படுத்தியும் வீடியோவை எடிட் செய்யலாம். இந்த வசதி தற்போது Google AI Plus, Pro மற்றும் Ultra சந்தாதாரர்களுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த அம்சம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.