தொடர் மழையால் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி வருகின்றன விவசாயிகள் மகிழ்ச்சி
28 Oct 2026, 11:23 pm

தொடர் மழையால் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி வருகின்றன விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி, அக்.28-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த தொடர் மழையால் கோமுகி, மணிமுக்தா அணை உட்பட பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி மற்றும் மணி முக்தா அணைகள், 335 ஏரிகள், 3 ஆறுகள் உள்ளன. அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகள் உள்ளன. பருவ மழைக்காலங்களில் அணை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும் பட்சத்தில் விவசாயம் செழிக்கும். குறிப்பாக கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்.

கடந்த ஆண்டு போதிய மழையில்லாத தால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பவில்லை. நடப்பாண்டு கோடை காலம்துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்ததால் நீர்நிலைகளில் தேங்கி யிருந்த தண்ணீர் வறண்டது.

மாவட்டத்தில் 90 சதவீத நீர்நிலைகளில் தண்ணீரில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த

சில வாரங்களுக்கு முன் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட னர்.

இந்நிலையில் வங்கக்கடலில் உரு வான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திங்கள் இரவு முதல் செவ்வாய் காலை வரை பரவலாக மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது.

நேற்று மதியம் நிலவரப்படி கோமுகி அணையின் மொத்த கொள்ளளவான 46 அடி உயரத்தில், 34 அடிக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. மேலும் விநாடிக்கு 450 கன அடி தண்ணீர் அணைக்கு நீர் வரத்தாக இருந்தது.

அதேபோல் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவான 36 அடி உயரத்தில் நேற்று மதியம் நிலவரப்படி 14 அடிக்கு தண்ணீர் தேங்கி யிருந்தது. விநாடிக்கு 151 கன அடி தண்ணீர் அணைக்கு நீர்வரத்தாக இருந்தது. இதுதவிர பெரும்பாலான ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தது.

ஒரே நாளில் பெரும்பாலான நீர்நிலை களில் தண்ணீர் தேங்கியதாலும், அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டதாலும் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிய டைந்தனர்.