கோமுகி அணையை ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை!
20 May 2026, 1:16 am

கோமுகி அணையை ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி, மே 19 - கள்ளக்குறிச்சி அருகே கச்சிராய பாளையத்தில் உள்ள கோமுகி அணையை ஆழப்படுத்தி, ஆக்கிர மிப்புகளை அகற்றி, அணையின் கரைகளை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கல்வ ராயன்மலை அடிவாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 46 அடி வரை நீரைத் தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோமுகி அணை கட்டப்பட்டது.

இந்த அணையின் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,8060 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மைக் கால்வாய் பாசனத்தின் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகின்றன.

இந்தக் கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக் குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதி களைச் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

கோமுகி ஆற்றின் குறுக்கே சோமனந்துறை, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, அதன் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட ஏரி களில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்யப்படுகிறது.

கோமுகி அணையின் கரை யோரக் கிராமங்களுக்கும் ஆற்றில் தொடர்ந்து நீர் செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால், சம்பா பருவத்துடன் சேர்த்து மூன்று போகமும் நெல் அறுவடை செய்தனர்.

ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட பருவகால மாற்றத்தால் பருவமழை பொய்த்துப் போனது. அதுமட்டுமன்றி, கோமுகி அணை கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை அணையைத் தூர்வாரவோ அல்லது முறையாகப் பராமரிக்கவோ இல்லை.

இதனால், கனமழைக் காலங்களில் கல்வராயன்மலைக் காட்டாற்றில் இருந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது பாறைகள், மண் மற்றும் மணல் அடித்து வரப்படுகின்றன. அவ்வாறு அடித்து வரப்படும் மண் துகள்கள் நீர்ப்பிடிப்புப் பகுதி யில் படிந்து விடுகின்றன.

கடந்த அறுபது ஆண்டுகளாக இவ்வாறு மண் படிந்து வருவதால், தற்போது சுமார் 30 சதவீதம் வரை அணை தூர்ந்து போய் மண் மேடாகக் காட்சியளிக்கிறது. இதனால் மழைக் காலங்களில் அணையில் போதிய அளவு நீரைத் தேக்கி வைக்க முடியாமல், குறை வான அளவே நீர் தேங்குகிறது. மேலும், அதிகளவு நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு அணையின் கரை களும் உயரமாக இல்லை.

இதன் காரணமாக, கடந்த காலங்களில் மூ்ப்போகும் தாராளமாகக் கிடைத்த தண்ணீர், தற்போது சம்பா பருவச் சாகுபடிக்கே போதுமானதாக இல்லை. சில ஆண்டுகளில் சம்பா சாகுபடியின் போது தண்ணீர் முற்றிலும் தீர்ந்து, கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகிப் போன நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அணை தூர்வாரப்படாமல் முப்பது சதவீதம் வரை தூர்ந்து போயி ருப்பதால், அதனை ஆழப்படுத்தச் சுமார் ரூ.30 கோடி வரை செலவாகும் எனத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மூலம் கடந்த ஆட்சியில் அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், முப்பது கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் என்பதாலும், அதிக நிதி தேவைப் பாட்டதாலும் கோமுகி அணை தூர்வாரும் திட்டத்தை அரசு பரி சீலனை செய்து வந்த நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

தற்போது அணை வறண்டு மண் மேடாக உள்ளதால், புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசாங்கம் தனி அதிகாரிகளை நியமித்து அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயிகளின் நலன் கருதியும், 50 கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்தைக் கருத்தில் கொண்டும் கோமுகி அணையைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், கரைகளை உயர்த்தி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, அணையின் மேற்குப் பகுதியில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன.

இதனால் மழைக் காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைக்க முடிவதில்லை.

எனவே, கோமுகி அணையின் கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையைப் பலப்படுத்தி ஆழப்படுத்தி னால் அதிக நீரைத் தேக்கி வைக்க முடியும்; விவசாயமும் செழித்து நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், கோமுகி அணை யில் பருவமழையால் நீர்ப்பிடிப்பு அதிகமாக இருக்கும் காலகட்டங்க ளில் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதி களவில் வருவதுண்டு.

அவர்களின் வருகைக்காகக் கோமுகி அணை யின் எதிர்ப்புறத்தில் சிறுவர் விளை யாட்டுப் பூங்கா ஒன்று அமைக்கப் பட்டது.

தற்போது அந்தப் பூங்கா பராமரிப்பின்றிப் புதர் மண்டிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுச் சிதலமடைந்த நிலையில் இருக்கிறது.

இதனை மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பது சுற்றுலாப் பயணி களின் விருப்பமாக உள்ளது.

எனவே, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு கோமுகி அணையின் நிலைமையைப் பார்வையிட்டு, அதனை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாகும். - சசிகுமார்