தங்கம் விலை ரூ.800 உயர்வு!
9 Jul 2026, 4:35 pm

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 உயர்ந்து ரூ.1,06,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில், ரூ.30 குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.100 உயர்ந்து ரூ.13,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.