தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூன் 1 (இன்று) தங்கநகை தொழிலாளர் கோரிக்கை தினம் மினுமினுக்கும் தங்கத்தின் பின்னே கருகும் வாழ்வு!

1 Jul 2026, 1:28 am
ஜூன் 1 (இன்று) தங்கநகை தொழிலாளர் கோரிக்கை தினம் மினுமினுக்கும் தங்கத்தின் பின்னே கருகும் வாழ்வு!

ஜூன் 1 (இன்று) தங்கநகை தொழிலாளர் கோரிக்கை தினம் மினுமினுக்கும் தங்கத்தின் பின்னே கருகும் வாழ்வு!

கோவை மாநகரின் அடையா ளங்களுள் ஒன்றாகத் திகழும் தங்க நகை தயாரிப்புத் தொழில், இன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களின் கண்ணீரிலும் கவலையிலும் தத்த ளித்துக் கொண்டிருக்கிறது. உலகையே தனது கைவண்ணத்தால் அழகுபடுத்தும் ஒரு சமூகத்தின் சொந்த வாழ்க்கை மட்டும் இருண்டு கிடப்பதுதான் காலத்தின் பெருங்கொடுமை.

உழைப்புச் சுரண்டல், குறைந்தபட்ச ஊதியமின்மை, காலாவதி யாகும் கால நேரம் எனப் பல்வேறு துய ரங்களைச் சுமந்து நிற்கும் கோவை மாவட் டத் தங்க நகை தொழிலாளர்களின் குரலை மத்திய, மாநில அரசுகளின் செவிகளுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், சிஐடியு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

ஆபரணங்களின் நகரம் என்று அழைக் கப்படும் கோவையில், மினுமினுக்கும் தங்க நகைகளுக்குப் பின்னால் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்க ளின் உழைப் பும், அவர்களின் கண்ணீர் கதை களும் மறைந்து கிடக்கின்றன. தங்கம் விலை ஏறும்போதும், இறங்கும்போதும் நலிவடை வது என்னவோ அடித்தட்டு பொற்கொல்லர் கள்தான்.

இத்தகைய சூழலில், ஜூன் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் ’தங்க நகை தொழிலா ளர் கோரிக்கை தினத்தை’ ஒட்டி, தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் (சிஐடியு) சார் பில் கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகில் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறஉள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சந்திரன் கூறுகையில், சிறு மற்றும் குறு பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை தற்பொழுது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகளிலும், யூனிட்டுகளிலும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் கூட இவர்களுக்கு வழங்கப்படுவ தில்லை.

சட்டம் வகுத்துள்ள 8 மணி நேர வேலை என்பது பழங்கதையாகி, தற்பொ ழுது 12 முதல் 13 மணி நேரம் வரை கொத்த டிமைகளைப் போல வேலை செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

கடுமையான உழைப்பு இருந்தும், இவர்களுக்கான கூலி மற்றும் ’சேதாரம்’ தொடர்ந்து பின்னோக்கியே நகர்கிறது.

பாரம்பரியமிக்க இந்த தொழி லாளர்களின் வாழ்வுரிமையைப் பாது காத்து, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். பொற்கொல்லர் நல வாரியத்தில் பதிவு செய்ய வரும் தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் எளிய முறையில் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும். நலவாரியப் பணப்பயன்களை இரட்டிப் பாக்குவதுடன், 60 வயதான அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 5,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சிறு, குறு பட்டறைகளுக்குக் குறைந்த கட்ட ணத்தில் மின்சாரம் வழங்குவதோடு, தொழில் வரி என்ற பெயரில் அதிகாரிகள் தொல்லை தருவதை நிறுத்த வேண்டும். நகை விற்பனையில் பொற்கொல்லர் வாரியத்திற்கு 0.05% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், ஒன்றிய அரசு தங்கம் வாங்குவதைக் குறைத்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்குக் கூறியிருப்பது இத்தொழிலை முழுமையாக நசுக்கும் செயல், இதுபோன்ற அறிவிப்பை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

பாரம் பரியத் தொழிலைக் காக்க, தொழிலாளர்கள் அனைவரும் கட்சி, சங்க வேறுபாடின்றி தங்களது குடும்பங்களோடு திரளாக வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அடுத்தவர் உடலை அலங்கரிக்கத் தங்கம் வளைக்கும் இந்தக் கரங்களுக்கு, சொந்தக் குடும்பத்தின் பசியைத் துடைக்கக் கூட வழியில்லாத அவலம் இன்னும் எத் தனை காலத்திற்கு நீடிக்கப் போகிறது? பகலிரவு பாராமல் 12 மணி நேரத்திற்கும் மேலாக பட்டறைகளின் உஷ்ணத்தில் உருகி தீயும் பொற்கொல்லர்களின் வாழ்க்கை, இன்று வெறும் கரியாக மாறிக் கொண்டிருக்கிறது

. தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்ற ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கும், சிறு பட்டறை களை நசுக்கும் வரி விதிப்புகளும் இவர் களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தின் மீதான மரண அடியாகும்.

இனியாவது அரசுகள் வெறும் வேடிக்கை பார்க்காமல், 60 வய தான பொற்கொல்லர்களின் முதுமைக்கான ஓய்வூதியத்தையும், உழைப்பிற்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தையும் உறுதி ெய்ய வேண்டும் என்பதே பொற்கொல்லர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது. (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.