உதவி மின்பொறியாளரின் தொழிலாளர் விரோதப்போக்கு
14 Jul 2026, 10:43 pm

உதவி மின்பொறியாளரின் தொழிலாளர் விரோதப்போக்கு

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோபி, ஜூலை 14- தொழிலாளர் மற்றும் தொழிற் சங்க விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் உதவி மின் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள டி.ஜி. புதூர் பிரிவு உதவி மின்பொறியாள ராக ராதிகா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், பட்டியலினத்தை சேர்ந்த பகுதி நேர பெண் பணியாளர் சரசாள் என்பவரை தொடர்ந்து அவ மரியாதையாக நடத்துவதும், விடுப்பு கேட்டால் வழங்க மறுப்பது, முறையாக அனுமதி பெற்று விடுப்பு எடுத்தால், விடுப்புக்கான ஊதியம் பிடித்தம் செய்வது என பல்வேறு வகையில் துன்புறுத்தியதாக கூறப் படுகிறது. இதுகுறித்து தொழிற்சங்க நிர் வாகிகளிடம் தெரிவித்து, நிர்வாகி கள் சென்று பெண் பணியாளர் பாதிக்கப்படுவது குறித்த கேட்டால், அவர்களையும் அவமரியாதையுடன் நடத்துவது, ஒருமையில் பேசுவது என தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே, அவர் மீது சட்ட ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வேட்டைகாரன்கோவில் மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் பி.சேகர் தலைமை வகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இளங்கோ, சரசாள் என்ப வர் பட்டியினத்தை சேர்ந்தவர் என்ப தால், அதே அலுவலகத்தில் பணி யாற்றும் உதவி பொறியாளர் ராதிகா, காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தி வரு கிறார். அந்த நடவடிக்கையை சுட்டிக் காட்டிய தொழிற்சங்க நிர்வாகிகளை தரம் தாழ்த்தி பேசி வருகிறார். அவர் மீது கோபி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ் நாடு முழவதும் அனைத்து மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெறும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில நிர்வாகி ஆர்.ஜான்சன், மண்டலச் செயலாளர் பி. ஸ்ரீதேவி, கிளைச் செயலாளர் கே. பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.