தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

16 Feb 2026, 2:37 pm
திருச்சி விரைவு செய்திகள்

மேலூர் ஆட்டுச்சந்தையில்  ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை

மேலூர், பிப்.16- மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் வாரந்  தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 நாட்கள்  கால்நடைச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்  கால்நடைகளை விற்கவும், வாங்கவும் செய்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம். சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பாரிவேட்டை  விழாவைக் கருத்தில் கொண்டு இந்த வாரம் நடை பெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரித்து, ஆடு களின் விலை கணிசமாக உயர்ந்தது. சந்தையில் ஒரு ஆடு சராசரியாக ரூ.5,000 முதல் ரூ. 20,000-க்கும் மேல் வரை விற்பனையானது. ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் வாங்கிச்  சென்றதாகவும், மொத்த விற்பனை மதிப்பு சுமார் ரூ.1 கோடி  வரை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் வியாபாரிகளுடன் சேர்ந்து வெளி மாவட்டங்க ளிலிருந்தும் வந்த பலர் வேன்கள் மூலம் ஆடுகளை வாங்கி  ஏற்றி சென்றனர். சிவராத்திரி பாரிவேட்டை காரணமாக அடுத்த சில வாரங்களிலும் ஆட்டின் தேவை அதிகமாக  இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

டிராக்டர் மோதி வாலிபர் பலி

தேனி, பிப்.16- தேனி அருகே வடபுதுப்பட்டி -மதுராபுரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டிராக்டர் மோதி யதில் உயிரிழந்தார். மதுராபுரி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த  ஆனந்தன் மகன் பிரபாகரன்(27). இவர், வடபுதுப்பட்டி யிலிருந்து மதுராபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, எதிர் திசையிலிருந்து கோட்டைப் பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி(30) என்பவர் ஓட்டி வந்த  டிராக்டர், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபாகரன் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து டிராக்டர் ஓட்டுநர் ராஜபாண்டி மீது அல்லி நகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகிறார்கள்.

மின்வேலி மின்சாரம் தாக்கி சரக்கு வாகன ஓட்டுநர் பலி

தேனி, பிப்.16- பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(40). சரக்கு வாகன ஓட்டுநர். சம்பவத்தன்று சிந்துவம்பட்டியில் உள்ள தோட்டத்தில் வாழை இலைக்கட்டுக்களை ஏற்ற வந்தார். அப்போது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். விசாரணையில் விலங்குகள் தோட்டத்துக்கு வரு வதைத் தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைந்தி ருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயமங்கலம் காவல்துறை யினர் விவசாயி முருகேசனை கைது செய்தனர். காவல்  ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.

நத்தம் அருகே மூதாட்டி பலி

நத்தம், பிப்.16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மீனாட்சிபுரத் தைச் சேர்ந்தவர் முனிக்காந்தம் (75). இவரது கணவர் ராம சாமி (80) ஏற்கனவே உயிரிழந்தவர். முனிக்காந்தம் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத னால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்  கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார், மூதாட்டி யின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேனியில் ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தேனி, பிப்.16- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 420 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொழிலாளர் துறையின் சார்பில், மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கு மானியமாக ரூ.40,000மும், பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக 4 நபர்  களுக்கு ரூ.10,00,000 உதவித்தொகையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 25 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.3,62,250 மதிப்பிலான பிரத்யேக ஸ்மார்ட் போன்களையும் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.14,02,250 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பஞ்சாபிகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில்  நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி

தேனி, பிப்.16- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் முதியோர்கள் மற்  றும் நோயாளிகளின் பயன் பாட்டிற்காக, பேட்டரி கார்  வசதி தொடங்கி வைக்கப்பட்  டது. ஆண்டிபட்டி அருகே க. விலக்கில் உள்ள தேனி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயா ளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் முதி யோர்கள் மற்றும் நடக்க இய லாத நோயாளிகள் மருத்துவ மனை வளாகத்திற்குள் எளி தாக சென்று வர ஏதுவாக, தனியார் நிறுவனங்கள் தங்க ளது சமூகப் பொறுப்பு நிதி யின் கீழ் 10 பேர் அமரக்கூடிய திறந்தவெளி பேட்டரி காரை  வழங்க முன்வந்தன. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் பேராசிரி யர் முத்து சித்ரா கொடிய சைத்து இந்த பேட்டரி கார் சேவையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்கா ணிப்பாளர் விஜய் ஆனந்த், துணை முதல்வர் கவிதா, நிலைய மருத்துவ அலு வலர் சிவக்குமார், உதவி  நிலைய மருத்துவ அலுவ லர்கள் மணிமொழி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

மகளிர் நலத் தொகை வழங்கும் தடுப்பு முயற்சி முறியடிப்பு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்

சிவகங்கை, பிப்.16- சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் கட்  டப்பட்ட 52 புதிய குடியிருப்பு களை அமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் பேசிய தாவது: கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக 480 வீடு கள் கட்டி வழங்கப்பட்டுள் ளன. இது மனிதநேயத்தின் அடையாளமாக கருதப்பட வேண்டும். வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமி ழர்களுக்கே குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அர சின் திட்டங்கள் வாக்கு அர சியலுக்காக அல்ல என்பது தெளிவாகிறது என்றார். மேலும், மகளிர் உரி மைத் திட்டத்தின் மூலம் 1.31  கோடி பெண்களுக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டதாகவும், இதற்கான முடிவு போர்க்  கால அடிப்படையில் ரகசி யமாக மேற்கொள்ளப்பட்டு பின்னர் முதல்வரால் அறி விக்கப்பட்டதாகவும் தெரி வித்தார். ரூ.1,000 வழங்குவதைத் தடுக்க சிலர் முயன்றாலும், “முடிந்தால் தடுத்து பார்க்க லாம்” என்ற வகையில் ரூ. 5,000 வழங்கி முதல்வர் நிர்  வாக திறனை வெளிப்படுத்தி யுள்ளார் என்று அமைச்சர் கூறினார். ரேசன் அட்டைதாரர் களுக்கு நிதி வழங்க முடி யாது என முன்பு கூறியவர் கள் தற்போது அதிக தொகை  வழங்குவதாக அறிவிப்ப தாகவும், மக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்றும் கூறுவ தாக அமைச்சர் தெரிவித் தார்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடிச் சென்றவர் கைது

சிவகாசி, பிப்.16- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எரிச்சநத்தத் தில் 108 ஆம்புலன்ஸை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் நந்தி ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் குணசேகர பாண்டியன் (39). இவர் சிவகாசி அருகே எரிச்ச நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு எரிச்சநத்தம் அங்கன்  வாடி மையம் அருகே ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு சாப்பிடச் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, ஆம்புலன்ஸ் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்த போது அருப்புக்கோட்டை அருகே சென்று  கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே, அருப்புக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து  சென்ற போலீசார் ஆம்புலன்சை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் எம்.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் (26) என்பவர் ஆம்புலன்ஸை திருடிச் சென்றது தெரியவந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.  மேலும் போலீசார் கூறுகையில், கனகராஜ் கடந்த  காலங்களில் தனியார் பள்ளி பேருந்து, லாரி ஆகிய வற்றை இதேபோல் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல்  மது போதையில் ஆம்புலன்சையும் ஓட்டிச் சென்றுள்ளார்.  திருடிச் செல்லும் வாகனங்களை விற்பதற்கு முயற்சி செய்வதில்லை. எங்காவது நிறுத்திவிட்டு வந்து விடுவார்  என தெரிவித்தனர்.

கால்வாயில் விழுந்து மூதாட்டி பலி

இராஜபாளையம், பிப்.16- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பி.எஸ்.கே.  பார்க் பகுதியில் வசித்து வந்தவர் கந்தசாமி (76), முன்னாள்  ராணுவ வீரர். இவரது மனைவி பிரேமலதா (68). இவர்கள்  தாட்கோ காலனியில் வீடு கட்டி வருவதால் தற்காலிக மாக பி.எஸ்.கே. பார்க் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.  கடந்த ஆறு மாதங்களாக பிரேமலதா மனநலக் கோளா றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், திங்களன்று காலை வீட்டில் இருந்து  வெளியே சென்ற பிரேமலதா மீண்டும் திரும்பி வர வில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் தேடியபோது அருகிலுள்ள கால்வாயில் ஒருவர் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கந்தசாமி அங்கு சென்று பார்த்தபோது, கால்வாய்க்குள் விழுந்த நிலையில் பிரேமலதா அசைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் தெற்கு போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

அனுமதியின்றி மது விற்றவர் கைது 150 பாட்டில்கள் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், பிப்.16- மல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமிநத்தம்  மேலூர் காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த  தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மல்லி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ரகுபதி சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற் கொண்டார். அப்போது தங்கபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தகரச் செட்டில் அரசு அனுமதி இன்றி மது  பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கபாண்டியன் கைது செய்யப்  பட்டார். அங்கிருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் மீது ஏற்கனவே 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார்  தெரிவித்தனர். அவர்மீது புதிய வழக்கு பதிவு செய்து விசா ரணை நடைபெற்று வருகிறது.

இளைஞர் தற்கொலை

இராமநாதபுரம், பிப்.16- இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஞாயிற்றுக்  கிழமை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாயல்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன்  பாப்புராஜ் (33). குடும்பத் தகராறு காரணமாக, இவர்  தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா,  3 வயதில் பெண் குழந்தை உள்ளனர்.  இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தூர் அரசுக் கல்லூரியில் சிசிடிவி கேமரா, கண்ணாடி உடைப்பு

சாத்தூர், பிப்.16- சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கண்ணாடி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன.     சாத்தூர் அருகே மேட்டமலையில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார்  800  மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று காலை கல்லூரியை காவலாளி திறந்துள்ளார். அப்போது, உள்ளே கொடிக்கம்பம், கண்  ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து உடைக்கப்  பட்டிருந்தன. எனவே, இதுகுறித்து, கல்லூரி முதல்வர் சீலாடேனி யலுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுதது அவர் சாத்  தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன்  பேரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா வீடியோவை  ஆய்வு செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை  வாறுகாலில் விழுந்த பசு மாடு

சாத்தூர், பிப்.16- சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையின் மூடப்படாத வாறுகாலில் பசுமாடு  விழுந்தது. நீண்ட நேர போராட் டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பிர தானச் சாலை உள்ளது. இப்பகுதியில் காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்,  வங்கிகள், கோவில்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் ஏராள மான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இச்சாலை இருபுறத்திலும் நெடுஞ்சா லைத்துறையால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வடி கால்கள் அமைக்கப்பட்டன. இவை பல இடங்களில்     மூடப்படவில்லை.   இந்நிலையில், மூடப்பட்ட வடிகாலின் மேற்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பசு மாடு திடீரென உள்ளே  விழுந்தது. அது வெளியே வர முடியாமல் தவித்தது. அக்கம் பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. எனவே, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த  தீயணைப்புத் துறை வீரர்கள், கழிவுநீர் வாறுகாலில் இறங்கி 3 மணி நேரம் போராடி பசுமாட்டை  உயிருடன் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வாறுகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதில்  முன்னாள் வேட்டை தடுப்பு காவலர் பலி

இராஜபாளையம், பிப்.16- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் மேற்கே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இப்பகுதி ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என  அழைக்கப்படுகிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, செந்நாய், சாம்பல் நிற  அணில், ராஜநாகம், மலைப்பாம்பு உள்  ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகவதி நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசித்து  வந்தவர் முத்தையா (68). இவர் வனத்துறை யில் வேட்டை தடுப்பு காவலராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்ததுடன், வீட்டின் அருகே நான்கு மாடு களை வளர்த்து வந்தார். ஞாயிறன்று இரவு ஒரு மாடு காணாமல்  போனதால், அதைத் தேடி வனப்பகுதிக்  குள் சென்ற முத்தையா வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் தேடிச் சென்ற போது அதிகாலை வனப்பகுதிக்குள் அவர்  உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த வனப்பகுதிக்குள் செல்லும்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்  என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.