கோவாவில் மெகா ஊழல் ரூ.1,023 சொத்துக்கள் முடக்கம்
21 Jun 2026, 9:17 pm

கோவாவில் மெகா ஊழல் ரூ.1,023 சொத்துக்கள் முடக்கம்

கோவாவில் கடந்த 2007 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில், ஏ.வி.எஸ். குழுமம் 10 சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்தச் சுரங்க ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கோவா காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த இரும்புத்தாது சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஏ.வி.எஸ். குழுமத் திற்குச் சொந்தமான சிங்கப்பூர் சொத்து கள் உட்பட, 1,023 கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதில் நடந்த சட்டவிரோத பணப் பரி மாற்றம் குறித்து அமலாக்கத் துறை தனி யாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், இரும் புத்தாதுவை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ததன் மூலம் ஏ.வி.எஸ். குழுமம் 2,492.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டறியப்பட்டுள்ளது.