கார்ப்பரேட் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கொதித்தெழும் கோவா செசா சுரங்கம் முதல் நெஸ்லே ஆலை வரை அலையெனத் திரளும் தொழிலாளர் வர்க்கம்!
21 May 2026, 10:38 pm

கார்ப்பரேட் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கொதித்தெழும் கோவா செசா சுரங்கம் முதல் நெஸ்லே ஆலை வரை அலையெனத் திரளும் தொழிலாளர் வர்க்கம்!

வேலைநிறுத்தம் 29

பனாஜி, மே 21- கோவாவின் சுரங்க மற்றும் தொழில்சார் மண்டலங்களில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த முறை, கட்டாய ஆட்குறைப்பு மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் நீக்கப்படுவதற்கு எதி ராகத் தொழிலாளர்களின் தன்னெழுச்சி யான மற்றும் தொழிற்சங்க வழியிலான போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளன.

டிங்னே-சுர்லா சுரங்க மண்டலத்தை முடக்கிய செசா தொழிலாளர்கள்

வேதாந்தா குழுமத்திற்குச் சொந்த மான ‘செசா ரிசோர்சஸ் லிமிடெட்’ (SESA Resources Limited) நிறுவனத்தின் கீழ் வடகோவாவின் டிங்னே-சுர்லா (Dingne-Surla) சுரங்கப் பகுதியில் பணி யாற்றி வந்த 85-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டனர். சுரங்கப் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கி தாதுக்கள் கொண்டு செல்லப்படும் நிலை யிலும், நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த தங்களை நீக்கிவிட்டு வெளி மாநிலத் தொழிலாளர்களை நிர்வாகம் பணியமர்த்துவதாகக் குற்றம் சாட்டி, கடந்த மார்ச் 2026 முதல் தொழிலாளர் கள் தங்களின் குடும்பங்களுடன் தொடர் மறியல் மற்றும் சாலை முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2026-இல், இப்பகுதி யில் தாதுக்களை ஏற்றிச் சென்ற லாரி களைத் தொழிலாளர்கள் முற்றுகை யிட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்க முயன்ற போதிலும், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கனிமப் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தொழிலாளர்கள் உறுதியுடன் களத்தில் நின்றனர்.

முன்னதாக, செப்டம்பர் 2025-இல் பிச்சோலிம் (Bicholim) பகுதியில் உள்ள செசா நிறுவன ஆலை வாயிலில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த சுரங்கப் பணிகளும் தற்காலிக மாக நிறுத்தப்பட்டன. நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்கம் மீதான அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற இப்பேரணியில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்ற னர். வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதி பிடித்தங்களை வழங்க மறுக்கும் நிர்வா கத்தைக் கண்டித்துப் பனாஜியில் உள்ள தலைமை அலுவலகத்தை நோக்கித் தொழிலாளர்கள் நடத்திய எழுச்சிமிகு பேரணி, கோவாவின் ஒட்டுமொத்த சுரங்க உழைப்பாளர்களையும் வர்க்க ரீதியாக ஒன்றிணைத்துள்ளது.

நெஸ்லே ஆலைத் தொழிலாளர்களின் தொடர் பட்டினிப் போராட்டம்

செசா சுரங்கப் போராட்டங்களுக்கு முன்பாகவே, பிச்சோலிம் தொழில் பேட்டையில் உள்ள பன்னாட்டு நிறுவன மான ‘நெஸ்லே’ (Nestle) உணவுப் பொருள் உற்பத்தி ஆலையிலும் தொழி லாளர் எழுச்சி தொடங்கியது. மௌ லிங்கெம் (Maulingem) பகுதியில் உள்ள நெஸ்லே ஆலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட 30 ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணிய மர்த்தக் கோரியும், நிலுவைத் தொகை யை வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் 25 அம்சக் கோரிக்கை சாசனத்தைச் சமர்ப்பித்திருந்தனர்.

தொழிலாளர் நீதிமன்றத்தின் சாதக மான உத்தரவுகளை அமல்படுத்த நெஸ்லே நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதால், ஆலை வாயிலில் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்ட த்தைத் தொழிலாளர்கள் தொடங்கினர். தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்தால், மாநிலம் தழுவிய அளவில் “நெஸ்லே நிறு வனமே கோவாவை விட்டு வெளியேறு” (Go Back Nestle Company) என்ற பிரச்சா ரத்தை முன்னெடுக்கப் போவதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள் ளனர்.

ஃபோமெண்டோ குழுமத்தின் போலி வாக்குறுதிகளும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

மறுபுறம், கோவாவின் முன்னணி சுரங்க நிறுவனமான ‘ஃபோமெண்டோ குழுமம்’ (Fomento Group) தனது சுரங்கங்களை மீண்டும் திறப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பாராட்டு தெரிவித்தார். டிசம்பர் 2025-இல் ‘கலே’ இரும்புத் தாது சுரங்கம் மற்றும் ‘குடேகல்’ பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்ட போது கோவா பாஜக அரசாங்கம் இதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது.

ஆனால், யதார்த்தத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதால், பிச்சோலிம் பகுதி மக்கள் தாதுப் போக்குவரத்தை முற்றுகை யிட்டுப் போராடினர். “சுரங்கத் தொழிலால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டை உள்ளூர் மக்கள் மட்டுமே அனுபவிக்கும் சூழலில், வேலைவாய்ப்பில் தங்களைப் புறக்க ணிப்பது அநீதி” என்று முன்னாள் பஞ்சா யத்து தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பிச்சோலிம் தாலுகாவின் சர்மனாஸ், முல்காவ், பொய்ரா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள், தங்களின் விவசாய நிலங்களில் சுரங்கக் கழிவுகள் படிந்து பயிர்கள் நாச மாவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரக் கோரி 2026-இன் தொடக்கத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அகில இந்தியத் தொழிற்சங்கங்களின் வர்க்கப்பிரகடனம்

இவற்றுடன் இணையாக, கோவா பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ‘தொழிலாளர் விநியோகச் சங்கம்’ (PWD Labour Supply Society) மூலம் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 1,700-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், கார்ப்ப ரேட் நிறுவனங்களின் ‘அமர்த்து, துரத்து’ கொள்கைகளுக்கு எதிராகவும், சிஐடியு மற்றும் ஏஐடியுசி ஆகியவை இணைந்து கோவாவில் மாபெரும் வர்க்கப் போராட்டங் களை ஒருங்கிணைத்து வருகின்றன.