தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகம் ஒன்றும் குஜராத்தோ, உத்தரப் பிரதேசமோ அல்ல கோ பேக் மிஸ்டர் பியூஷ் கோயல்!

12 Apr 2026, 5:30 am
தமிழகம் ஒன்றும் குஜராத்தோ, உத்தரப் பிரதேசமோ அல்ல கோ பேக் மிஸ்டர் பியூஷ் கோயல்!

தமிழகம் ஒன்றும் குஜராத்தோ, உத்தரப் பிரதேசமோ அல்ல கோ பேக் மிஸ்டர் பியூஷ் கோயல்!

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவையில் தொழிலதிபர்களைச் சந்தித்து, "வட மாநிலங்களைப் போலத் தமிழகமும் வளர பா.ஜ.க-விற்கு வாக்களியுங்கள்" என்று பேசியுள்ளார்.

தமிழகத்தின் யதார்த்தம் தெரியாமல் அல்லது அதைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு அவர் பேசியுள்ள கருத்துகள் தொழில்துறையினரிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. 'மேக் இன் இந்தியா' திட்டம் தொடங்கி 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இதன் லட்சணம் என்ன? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்தப்போகிறோம் என்றார்கள். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் இது சராசரியாக 13 சதவீதம் முதல் 17 சதவீதம் என்ற அளவிலேயே முடங்கிக் கிடக்கிறது.

வட மாநிலங்கள் தொழில் வளர்ச்சியடைந்துவிட்டன, மின் பற்றாக்குறையே இல்லை என்று பியூஷ் கோயல் புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு கேள்வி: வட மாநிலங்கள் அவ்வளவு வளர்ச்சியடைந்திருந்தால், அங்கிருந்து பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு ஏன் ஓடி வர வேண்டும்? வளர்ச்சி என்பது பேச்சில் அல்ல, மக்களின் வாழ்வாதாரத்தில் இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த உற்பத்தித் தொழிற்சாலைகளில் 54 சதவீதப் பங்களிப்பை முதல் ஐந்து மாநிலங்களே கொண்டுள்ளன. அதில் 40,121 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா போன்றவை தமிழகத்திற்குப் பின்னால் தான் உள்ளன.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விடத் தமிழகம் பல மடங்கு உயரத்தில் இருக்கும்போது, "எங்களைப் பார்த்து வளருங்கள்" என்று பியூஷ் கோயல் கூறுவது நகைப்புக்குரியது. கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் சிறு தொழில்களை முடிச்சவிழ்க்க வைக்கும் ஒன்றிய அரசு, தேர்தல் நேரத்தில் மட்டும் பொய்க் கதைகளை அவிழ்த்து விடுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.