பைக்காரா அருவிக்கு செல்லத் த
18 Nov 2025, 3:21 pm
<p><strong>பைக்காரா அருவிக்கு செல்லத் தடை</strong></p>
<p>உதகை, நவ.18- உதகை பைக்காரா அருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அருவிக்குச் செல்ல சுற்று லாப் பயணிகளுக்கு திங்களன்று முதல் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி வனக்கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை பைக்காரா அருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெ றவுள்ளது. இதனால் அருவி திங்களன்று முதல் மூடப்ப டுகிறது. பணிகள் முடிவடைந்ததும் பைக்காரா அருவிக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோன்று, உதகை லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலையை சீர மைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாக னங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நடந்து சென்று சுற்றுலாத் தலங்களைக் காணலாம் என நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.</p>
