தொழில்நுட்ப கதிர்
26 Dec 2025, 4:32 pm

விரைவில் ஜிமெயில் முகவரியை மாற்றும் அம்சம்!

பயனர்கள் தங்கள் ஜிமெயில் முகவரியின் “@gmail.com”க்கு முன் வரும் பகுதியை மாற்றிக் கொள்ளும் அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. நம்மில் பலர் பள்ளிப் பருவத்தில் தொடங்கிய ஜிமெயில் முகவரியை தற்போது வரை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலானோர் “@gmail.com”க்கு முன் வரும் பகுதியில் நமது பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்திருப்பதுண்டு. இதுபோன்ற ஜிமெயில் முகவரியை மாற்ற முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது, ஜிமெயில் முகவரியின் “@gmail.com”க்கு முன் வரும் பகுதியை (username) மாற்றிக் கொள்ளும் அம்சத்தை படிப்படியாக வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய ஜிமெயில் முகவரி alias புதிய ஜிமெயில் முகவரி ஆக செயல்படும்; அதாவது, பழைய முகவரி மற்றும் புதிய முகவரி ஆகிய இரண்டிற்கும் வரும் இ-மெயில்கள் ஒரே inbox-இல் காட்டப்படும். அதேபோல், பயனர்கள் தங்கள் Gmail, YouTube, Maps, Drive, Google Play ஆகிய அனைத்திலும் பழைய அல்லது புதிய முகவரியை பயன்படுத்தி உள்நுழைய முடியும். ஜிமெயில் முகவரியை 12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஒவ்வொரு கணக்கும் அதிகபட்சம் 3 முறை மட்டுமே முகவரியை மாற்ற (4 முகவரிகள்) அனுமதி வழங்கப்படும். புதிய முகவரியை 12 மாதங்களுக்கு நீக்க முடியாது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

நோட்புக்எல்எம்-இல் ஆடியோ அம்சங்களை விரிவுபடுத்தும் கூகுள்!

கூகுள் நிறுவனம், தனது நோட்புக்எல்எம் (NotebookLM) பயன்பாட்டில் புதிதாக “Lecture” என்ற ஆடியோ மோட்-ஐ சோதனை செய்து வரு கின்றது. நோட்புக்எல்எம்-இல் தற்போது ஆடியோ அம்சங்களை விரிவுபடு த்தும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் “Lecture Mode” என்ற புதிய அம்சம் மூலம், பயனர்கள் 30 நிமிடங்கள் வரை நீளமான ஏஐ சொற்பொழிவுகளை (Lectures) கேட்க முடியும். இது சாதாரண text-to-speech அல்ல; பயனர்கள் பதிவேற்றிய ஆவ ணங்களை ஏஐ தொகுத்து, பாட்காஸ்ட் (Podcast) பாணியில் விளக்கமாக வழங்கும். இந்த புதிய அம்சத்தில் பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு கொண்ட குரல் விருப்பமும் சேர்க்கப்பட உள்ளது. இதன்மூலம், ஆராய்ச்சி ஆவணங்களை எளி தாக புரிந்துகொள்ளவும், கற்றுக் கொள்ளவும் பயனர்களுக்கு உதவி யாக இருக்கும். தற்போது இந்த அம்சம் சோதனை நிலையில் உள்ளது. விரைவில், பொதுமக்க ளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பின் ஐஓஎஸ் பதிப்பில் புதிய வசதி! வாட்ஸ்அப் மூலம், பயனர்கள் தங்களின் ஐபோனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களை கண்காணிக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. WABetaInfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பின் ஐஓஎஸ் பதிப்பில் settings வழியாக ஐபோனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களை பார்க்கவும், கண்காணிக்கவும் அம்சத்தை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது. குறிப்பாக, Bluetooth சாதனங்கள் போன்றவை எப்போது, எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை WhatsApp-இல் நேரடியாக அறியலாம். இணைக்கப்பட்ட சாதனங்கள் Linked Devices பட்டியலில் சாதனத்தின் பெயர் மற்றும் செயலில் இருந்த இணைக்கப்பட்ட நேரத்துடன் தோன்றும். தற்போது இது விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.