தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீணிலத்தில் யாரும் நீரின்றி வாழ்தல் கூடுமோ? - ஆர்.நித்யா

23 May 2026, 10:47 pm
நீணிலத்தில் யாரும் நீரின்றி வாழ்தல் கூடுமோ? - ஆர்.நித்யா

நீணிலத்தில் யாரும் நீரின்றி வாழ்தல் கூடுமோ? - ஆர்.நித்யா

காற்றில்லாமல் இந்த பூமியில் உயிர் வாழ முடியாது. அடிக்கிற காற்றில் குளுமையை உணர்ந்தால் அது நமக்கு தென்றல்; அதை நாம் விரும்புவோம். அதுவே வெப்பத்துடன் வரும் அனல்காற்றை விரும்புவோமோ?

காற்றில்லாமல் இந்த பூமியில் உயிர் வாழ முடியாது. அடிக்கிற காற்றில் குளுமையை உணர்ந்தால் அது நமக்கு தென்றல்; அதை நாம் விரும்புவோம். அதுவே வெப்பத்துடன் வரும் அனல்காற்றை விரும்புவோமோ? மனிதனுக்கு உணவு, உடை, உறை விடம் இவை மூன்றும் மிக இன்றியமை யாதது. அத்துடன் தண்ணீரும் முக்கிய மானது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய் யான மொழி. மூன்றாம் உலகப்போர் ஒன்று நடந்தால் அது நிச்சயம் நீருக்கா கத்தான் நடக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். நீர் பிரச்சனை காரணமாக நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே போர் உண்டாக நேரிடும். நம் நாட்டிலும் காவிரி பிரச்சனை தமிழ்நாட் டுக்கும் கர்நாடகாவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. கோளாறு இல்லாத கோள் எண்ணிலடங்கா உயிரினங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பூமி. தற்போது உலகில் நிலைத்த சுற்றுச் சூழல் அமைப்புடன் உயிரினங்கள் வாழ் வதற்கு உகந்த கோளாறு அற்ற கோளாக இருப்பது பூமிதான். ஆனால் அந்த பூமி யை பாதுகாக்காமல், அதை கோளா றாக்கிக் கொண்டிருக்கிறோம். பரந்த பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளைக் கொண்ட ஒரே கோளான பூமி, அதன் மேற்பரப்பில் 71% நீர் சூழ்ந்திருப் பதால், விண்வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரு நீலப் போர்வையைப் போர்த் தியது போல் காட்சியளிக்கிறது. இந்த நீர் நமது கோளின் காலநிலையையும் உயிரினங்களையும் வடிவமைக்கிறது. கோடைக்காலம் துவங்கி விட்டால், வெப்பம் தாங்க முடியாமல் நம் வீடுக ளில் கூடுதலாக மின்விசிறி வாங்குவோ மா, ஏசி வாங்குவோமா என யோசிப்போம். நான்கு, ஐந்து பேர் வசிக்கும் ஒரு வீட்டில் நிலவும் வெப்பத்தை தாங்க முடியாமல், குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நாம் பல யோசனைகளையும் திட்டங்களையும் போடுகிறோமே. அப்படியென்றால், எண் ணிலடங்கா உயிரினங்களை வாழ வைக் கும் இந்தப் பூமியை குளிர்ச்சியாக வைப் பதும் நமது கடமைதானே. நம்மை வாழ வைக்கும் இந்த பூமியும் நம் வீடுதானே. தற்போது தமிழ்நாட்டில் பல அணை கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த கோடைக்காலத் தில் வைகை அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. ஒரு மாதத் திற்கு மட்டுமே நீர் இருப்பதாக அதிகா ரிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதல்/ காலநிலை மாற்றம் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட புவி வெப்பமயமாதல் முழுவதற்கும் ஏறக் குறைய மனிதச் செயல்பாடுகளே கார ணம் என அறிவியல் தெளிவாகக் கூறுகி றது. ‘புவி வெப்பமயமாதல்’ என்பது புவி யின் நீண்ட கால வெப்பமயமாதலைக் குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலிருந்தும், 1970-களின் பிற்பகுதி யிலிருந்தும் புவி வெப்பநிலையில் ஏற்பட் டுள்ள உயர்வு நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் என்பது, வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக் களின் செறிவு அதிகரிப்பதால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால உயர்வை குறிக்கிறது. ‘புவி வெப்பமயமாதல்’ மற்றும் ‘கால நிலை மாற்றம்’ ஆகிய சொற்கள் சில சமயங்களில் ஒன்றுக்கு பதிலாக மற் றொன்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ‘புவி வெப்பமயமாதல்’ என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு அம்சமே. இந்த வெப்பமயமாதல், முக்கியமாக மக்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப் பதாலும், வெப்பத்தைத் தக்கவைக்கும் வாயுக்களைக் காற்றில் வெளியிடுவ தாலும் ஏற்படுகிறது.

1800-களின் பிற்பகுதி யிலிருந்து பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது; இதில் பெரும்பாலான வெப்பமயமாதல் கடந்த 40 ஆண்டு களில் நிகழ்ந்துள்ளது.

தொழில் புரட்சி ஆரம்பித்த 1800 கால கட்டங்களுக்குப் பிறகு புதைப்படிமங் களை எரிப்பது அதிகரித்தது.

இதனால் ஏற்பட்ட உமிழ்வுகள் வளிமண்டலத்தில் அதிகளவில் சேரத் தொடங்கியதால் பூமி சூரிய வெப்பத்தைத் தக்க வைக்கத் தொடங்கியது.

இதனால் புவியின் வெப் பம் அதிகரிக்கத் தொடங்கியது.

எல் நினோ - லா நினோ எல் நினோவும் லா நினோவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி நிகழும்.

வெப்பநிலை அதிகரிப்பதை நாம் ‘எல் நினோ’ என்றும், வெப்பநிலை குறையும் நிலையை ‘லா நினோ’ என்றும் அழைக்கிறோம். மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள், எல் நினோ போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக இதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வெப்பநிலை வரம்பை பூமி கடக்கக்கூடும் என்ற எச்சரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையிலும்கூட, வெப்பநிலை அதிகரிப்பு என்பது துரிதமாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத் தால் தகித்துக் கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று கால நிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதனால், தமிழ்நாட் டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக் கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவிற்கு பூஜ்ஜிய நாள்? 2023 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. தரவுகளின்படி, ‘டே ஜீரோ’ போன்ற தண்ணீர் நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது.

‘டே ஜீரோ’ என்பது, ஒரு நகரம் அல்லது மாநிலத்தில் அதன் மக்களுக்கு விநியோகிக்கக் கிடைக்கும் குடிநீர் தீர்ந்து போகும் தருணத்தை விவரிக்கும் ஒரு கருத்து. வேகமான நகரமயமாக்கல், நிலத்தடி நீரைச் சார்ந்திருத்தல் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவை சென்னை, பெங்களூரு மற்றும் தில்லியின் சில பகுதிகள் போன்ற நகரங்களை ஏற்கென வே தண்ணீர் பற்றாக்குறைக்குத் தள்ளியுள்ளன. ‘டே ஜீரோ’ என்பது வெறும் தண்ணீர்ப் பிரச்சனை மட்டு மல்ல என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா. பேரிடர் இடர் குறைப்பு அலுவலகத்தின்படி, நீர்மட்டச் சரிவு பொது சுகா தார அவசர நிலைகள், உணவு விநியோகத் தடைகள், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சமூக அமைதியின்மை ஆகிய வற்றைத் தூண்டக்கூடும். இதனால் நலிவடைந்த சமூகங் கள், மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கலாம். 2022 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. கணிப்புகளின்படி, தற்போதைய நுகர்வு மற்றும் மேலாண்மைப் போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் பேர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்ளக்கூடும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ் வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. எதார்த்தமாகிறதா தண்ணீர் பிரச்சனை? 2024 ஆம் ஆண்டின் ஐ.நா. உலக நீர் மேம்பாட்டு அறிக்கை, தற்போது 230 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் வாழ்வதாகவும், பல முக்கிய நகரங்கள் அபாயகரமான குறைந்த நீர் இருப்பு அளவை நெருங்கி வருவதாகவும் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், மழைப்பொழிவு மேலும் சீரற்றதாக மாறியுள்ளதால், நீர் திட்டமிடலும் சேமிப்பும் கணிக்க முடியாததாகி வருகின்றன. பெரும்பாலும் ஒரு பாதுகாப்பு வலையாகக் கருதப்படும் நிலத் தடி நீரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. யுனெஸ் கோவின் 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நிலத்தடி நீர் அறிக்கையின்படி, உலகின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலை கள், அவை இயற்கையாக மீண்டும் நிரம்பும் வேகத்தை விட வேகமாக வற்றி வருகின்றன. தண்ணீர் நெருக்கடி என்பது தற்போது ஏதோ ஒரு வடிவத்தில் எதார்த்தமாகிவிட்டது. இன்றைக்கு எதார்த்தமாக தெரியும் தண்ணீர் பிரச்சனை வரும்காலங்களில் உயிரினங் களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்கு பெரும் கேடுகளை ஏற்படுத்தக் கூடும். பாரம்பரியமாக, மனிதகுலம் தனது நீர் விநியோகத் திற்காக ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத் தடி நீரைச் சார்ந்துள்ளது. இந்த அமைப்புகள் இன்றியமை யாதவை. இப்போது, உலகின் தொழில் வளர்ச்சியால், இன்னும் பல இடங்களில் நீரின் தேவை, விநியோகத்தை விட அதிகமாகப் போகிறது. நீர் என்பது H2O மட்டும்தானா? ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் வெறுமனே ஒன்றாகக் கலப்பதால் தண்ணீர் உருவாகி விடாது. அணுக் களிலிருந்து நம்மால் தண்ணீரை எளிதாக உருவாக்க முடி யாது. இப்போது காற்றிலிருந்து நீரைச் சேகரிப்பதிலும், ஈரப் பதத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதிலும் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், காற்றிலிருந்து நீரைச் சேகரிப்பது குறித்த பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. இதற்கும் மேலாக, உலகின் சில பகுதிகளில் இன்னும் சுத்தமான நீர் கிடைப்பதில்லை. பூமியில் 71% நீர் இருந் தாலும், அதில் பெரும்பாலானவை உவர்நீராக இருப் பதால் குடிப்பதற்கு உகந்ததல்ல. பூமியின் நீரில் வெறும் 2% மட்டுமே நன்னீராகவும் குடிப்பதற்குப் பாதுகாப் பானதாகவும் உள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட நீர், நம்மால் சென்றடைய முடியாத துருவப் பனிப் பகுதிகளில் அமைந்துள்ளது. நம் வீடுகளிலும், பணியிடங்களிலும் தண்ணீரை நாம் மிக எளிதாகப் பெறுவதால், அது ஒரு வரையறுக்கப்பட்ட வளம் என்பதையும், ஒருநாள் அது தீர்ந்து போகக்கூடும் என்ப தையும் மறந்து விடுகிறோம். விண்ணும் மண்ணும் விஞ்ஞானிகள் பூமியில் நீரை உருவாக்குவதிலும் சேகரிப் பதிலும் மட்டும் ஆர்வம் காட்டவில்லை. அவர்களின் ஆராய்ச்சி விண்வெளியின் தொலைதூரப் பகுதிகள் வரை நீள்கிறது. நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஹைட் ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை மறுசுழற்சி செய்து நீரை (மற்றும் மீத்தேன் வாயுவை) உருவாக்க, தங்களின் நீர் மீட்பு அமைப்பைச் சார்ந்துள்ளனர். நமக்கு இங்கு கிடைக்கும் மழைநீர் மற்றும் நீர்த்தேக்கங்கள் விண்வெளியில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே நீரின் அளவு இன்னும் குறைவாகவே உள்ளது.

விண்வெளியிலிருந்து நம்மால் நீரைச் சேகரிக்க முடிந்தால் அது மிகவும் பயனாக இருக்கும்.

ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம்? செயற்கைக்கோள்கள் காலநிலை மாற்றங்கள், மாசுபாடுகளை கண்காணிக்கப் பயன்படுகின்றன.

விண்வெளி தொழில்நுட்பங்கள் பூமியில் நமது இருப்பிடம் (ஜிபிஎஸ்) அறிதல், நீர் சுத்திகரிப்பு முறைகள் ஆகியவற்றுக்கு உதவுகின்றன.

தற்போதைக்கு, உலகளாவிய அல்லது கோள அளவில்கூட நீரைச் சேகரிப்பது என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

விண்வெளியை ஆராயும் விஞ்ஞானிகள், எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியையும் கவனத்தில் கொண்டு, அவற்றை பாதுகாப்பதற்கும் மழைக் காலங்களில் நீர் வீணாகாமல், மக்களுக்கு குடிநீராகப் பயன்படுவதற்கும் ஏதேனும் ஆராய்ச்சிகளை-திட்டங்களை கொண்டு வருவது அவசியமாகிறது.

ஏஐ நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறதா? செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை இருகரம் விரித்து வரவேற்ற மாநிலங்கள், தற்போது ஒரு கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

செயற்கை நுண்ணறிவின் வேகத்திற்கு அவற்றின் நீர் விநியோகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்த மையங்கள், தங்களின் செயல்பாடுகளைக் குளிர்விக்க, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சில்லுகளுக்கு ஆற்றலளிக்கும் செயலிகளைக் குளிர்விக்க, பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.

தரவு மையங்கள் வருவதற்கு முன்பே சில மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மற்ற மாநிலங்கள் போதுமான நீர் உள்கட் டமைப்பு இல்லாமை, குறைந்த நீர் சேமிப்புத் திறன் மற்றும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான நிலத்தடி நீர் இல்லாமை போன்ற வேறுவித நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மையம் ஒரு பொருளாதார வாய்ப் பாகத் தோன்றுகிறது.

இதில் நாம் கவனமாக இல்லாவிட் டால், ஒரு பெரும் வள நெருக்கடியாக மாறக்கூடும்.

நீர் மேலாண்மை அமைப்பு அவசியம் நீரின் தேவையையும் அதைச் சேமித்து வைப்பதன் அருமையையும் உணர்ந்து நீர் மேலாண்மை என்னும் சிறப் பான அமைப்பை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். சங்க கால மக்கள் நீர் மேலாண்மைக் குழு அமைத்து மழைநீர் சேகரிப்பு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் என்று வாழ்ந்து வந்ததை சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

சங்ககால மக்கள் நீரைத் தடுக்க கரும்பின் கழிகளையும் மணல் மூட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதற்கும் கட்டுப்படாமல் நீர் மிகுந்தால் கல்லாலான தடுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். இது கற்சிறை, கல்லணை என்று அழைக்கப்பட்டது.

இப்போது நாம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பூமியின் கருப்பை வரை உறிஞ்சுகிறோம்.

மறைந்த விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார், “நீரை வானிலிருந்து வர வையுங்கள்.

பூமிக்குள் தேடாதீர்கள்” என்ற கருத்தை முன்மொழிந்தார். நாம் வீணாக்கும் ஒரு குவளை நீரை மீண்டும் உற்பத்தி செய்ய மேகங்கள் பெரும் பிரயத் தனம் செய்ய வேண்டும்” என்றார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், தண்ணீர்ப் பற்றாக் குறையை போக்கவும் தமிழக அரசு 2001 ஆம் ஆண்டு முதல் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக்கியுள்ளது.

அந்தக் காலத்தில் மக்களே அவரவர் வாழ்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை, அதற்கென ஆள்க ளை நியமித்து பாதுகாத்தனர்.

ஆனால் இன்றைக்கு, மணல் சுரண்டல் மூலம் ஆறுகள் எல்லாம் அழிந்து கொண்டி ருக்கின்றன.

நீர்நிலைகளில் கழிவுகள் கலக்கப்படுவதன் மூலம் மாசடைந்து கொண்டிருக்கின்றன.

மரங்களும் மழையும் ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!’ - இந்த உண்மை மொழியை அறியாதவர் இல்லை.

மழை பெய்வதற்கு மரங் கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மரங்கள் மழையை உருவாக்குகின்றன என்றும், அதிக தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அதிக மழை பெய் கிறது என்ற கருத்தை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன.

மரங்கள் தங்கள் வேர்கள் மூலம் பூமியிலுள்ள நீரை உறிஞ்சி, இலைகள் வழியாக நீராவியாக வளிமண்டலத் திற்கு அனுப்புகின்றன.

இந்த நீராவி காற்றில் கலந்து குளிர் வடைந்து மேகங்களாக மாறுகின்றன.

காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மழையாகப் பொழிகிறது.

மரங்கள் அதிக சூரிய ஒளியை ஈர்த்து, சுற்றிலும் குளிர்ச்சியான சூழலை உருவாக்குகின்றன.

இந்த குளிர்ச்சியான காற்று மழையை ஈர்க்கும் சக்தி கொண்டது.

மழைக்காலங்களில் அதிகளவில் புதிய செடிகள் மற்றும் மரக்கன்றுகள் முளைத்து இயற்கைச் சூழல் சமநிலை அடை கிறது. சராசரியாக 40% அல்லது அதற்கு மேல் நிலப்பரப் பில் பெய்யும் மழையின் பெரும்பகுதி, ஆவியாதல் மற்றும் தாவரங்களிலிருந்து ஏற்படும் நீராவிப்போக்கு ஆகியவற் றால் உருவாகிறது.

மரங்களின் பயனறிந்து, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒரு லட்சம் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாற்றத்தை ஏற்படுத்தும் நேரம்... நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை எல்லாம் நிறைவேற்றாமல் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற முழக்கங்களுக்கு எந்தவித அர்த்தமும் இல்லை.

இப்போ தெல்லாம் நீர் இல்லை என்ற குரல்கள் எந்தளவுக்கு அதிகரித் துள்ளனவோ, அதைவிடப் பன்மடங்காக நீரை வீணடிப் போரும் இருக்கின்றனர்.

இயற்கையை அழித்துவிட்டு மனிதன் வாழ நினைத் தால், அது மனிதனை அழித்துவிடும்.

தண்ணீர் பற்றாக் குறை சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

நம்மிடம் அறிவும், வளங்களும் உள்ளன; மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளும் இருக்கின்றன.

அதனால் செயல்படுவதுதான் முக்கியம். அதுவும் இப்போதே.

நாம் புதிய தொழில்நுட் பங்களை ஏற்றுக்கொண்டு, நீரைப் பயன்படுத்தும் முறை யை மறுவடிவமைத்து, அனைவருக்கும் நீர் கிடைக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம்!.

காற்றில்லாமல் இந்த பூமியில் உயிர் வாழ முடியாது. அடிக்கிற காற்றில் குளுமையை உணர்ந்தால் அது நமக்கு தென்றல்; அதை நாம் விரும்புவோம். அதுவே வெப்பத்துடன் வரும் அனல்காற்றை விரும்புவோமோ? மனிதனுக்கு உணவு, உடை, உறை விடம் இவை மூன்றும் மிக இன்றியமை யாதது. அத்துடன் தண்ணீரும் முக்கிய மானது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய் யான மொழி. மூன்றாம் உலகப்போர் ஒன்று நடந்தால் அது நிச்சயம் நீருக்கா கத்தான் நடக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். நீர் பிரச்சனை காரணமாக நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே போர் உண்டாக நேரிடும். நம் நாட்டிலும் காவிரி பிரச்சனை தமிழ்நாட் டுக்கும் கர்நாடகாவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. கோளாறு இல்லாத கோள் எண்ணிலடங்கா உயிரினங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பூமி. தற்போது உலகில் நிலைத்த சுற்றுச் சூழல் அமைப்புடன் உயிரினங்கள் வாழ் வதற்கு உகந்த கோளாறு அற்ற கோளாக இருப்பது பூமிதான். ஆனால் அந்த பூமி யை பாதுகாக்காமல், அதை கோளா றாக்கிக் கொண்டிருக்கிறோம். பரந்த பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளைக் கொண்ட ஒரே கோளான பூமி, அதன் மேற்பரப்பில் 71% நீர் சூழ்ந்திருப் பதால், விண்வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரு நீலப் போர்வையைப் போர்த் தியது போல் காட்சியளிக்கிறது. இந்த நீர் நமது கோளின் காலநிலையையும் உயிரினங்களையும் வடிவமைக்கிறது. கோடைக்காலம் துவங்கி விட்டால், வெப்பம் தாங்க முடியாமல் நம் வீடுக ளில் கூடுதலாக மின்விசிறி வாங்குவோ மா, ஏசி வாங்குவோமா என யோசிப்போம். நான்கு, ஐந்து பேர் வசிக்கும் ஒரு வீட்டில் நிலவும் வெப்பத்தை தாங்க முடியாமல், குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நாம் பல யோசனைகளையும் திட்டங்களையும் போடுகிறோமே. அப்படியென்றால், எண் ணிலடங்கா உயிரினங்களை வாழ வைக் கும் இந்தப் பூமியை குளிர்ச்சியாக வைப் பதும் நமது கடமைதானே. நம்மை வாழ வைக்கும் இந்த பூமியும் நம் வீடுதானே. தற்போது தமிழ்நாட்டில் பல அணை கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த கோடைக்காலத் தில் வைகை அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. ஒரு மாதத் திற்கு மட்டுமே நீர் இருப்பதாக அதிகா ரிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதல்/ காலநிலை மாற்றம் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட புவி வெப்பமயமாதல் முழுவதற்கும் ஏறக் குறைய மனிதச் செயல்பாடுகளே கார ணம் என அறிவியல் தெளிவாகக் கூறுகி றது. ‘புவி வெப்பமயமாதல்’ என்பது புவி யின் நீண்ட கால வெப்பமயமாதலைக் குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலிருந்தும், 1970-களின் பிற்பகுதி யிலிருந்தும் புவி வெப்பநிலையில் ஏற்பட் டுள்ள உயர்வு நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் என்பது, வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக் களின் செறிவு அதிகரிப்பதால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால உயர்வை குறிக்கிறது. ‘புவி வெப்பமயமாதல்’ மற்றும் ‘கால நிலை மாற்றம்’ ஆகிய சொற்கள் சில சமயங்களில் ஒன்றுக்கு பதிலாக மற் றொன்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ‘புவி வெப்பமயமாதல்’ என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு அம்சமே. இந்த வெப்பமயமாதல், முக்கியமாக மக்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப் பதாலும், வெப்பத்தைத் தக்கவைக்கும் வாயுக்களைக் காற்றில் வெளியிடுவ தாலும் ஏற்படுகிறது. 1800-களின் பிற்பகுதி யிலிருந்து பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது; இதில் பெரும்பாலான வெப்பமயமாதல் கடந்த 40 ஆண்டு களில் நிகழ்ந்துள்ளது.

தொழில் புரட்சி ஆரம்பித்த 1800 கால கட்டங்களுக்குப் பிறகு புதைப்படிமங் களை எரிப்பது அதிகரித்தது.

இதனால் ஏற்பட்ட உமிழ்வுகள் வளிமண்டலத்தில் அதிகளவில் சேரத் தொடங்கியதால் பூமி சூரிய வெப்பத்தைத் தக்க வைக்கத் தொடங்கியது. இதனால் புவியின் வெப் பம் அதிகரிக்கத் தொடங்கியது.

எல் நினோ - லா நினோ எல் நினோவும் லா நினோவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி நிகழும்.

வெப்பநிலை அதிகரிப்பதை நாம் ‘எல் நினோ’ என்றும், வெப்பநிலை குறையும் நிலையை ‘லா நினோ’ என்றும் அழைக்கிறோம்.

மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள், எல் நினோ போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக இதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வெப்பநிலை வரம்பை பூமி கடக்கக்கூடும் என்ற எச்சரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையிலும்கூட, வெப்பநிலை அதிகரிப்பு என்பது துரிதமாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத் தால் தகித்துக் கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று கால நிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதனால், தமிழ்நாட் டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக் கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவிற்கு பூஜ்ஜிய நாள்? 2023 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. தரவுகளின்படி, ‘டே

ஜீரோ’ போன்ற தண்ணீர் நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. ‘டே ஜீரோ’ என்பது, ஒரு நகரம் அல்லது மாநிலத்தில் அதன் மக்களுக்கு விநியோகிக்கக் கிடைக்கும் குடிநீர் தீர்ந்து போகும் தருணத்தை விவரிக்கும் ஒரு கருத்து. வேகமான நகரமயமாக்கல், நிலத்தடி நீரைச் சார்ந்திருத்தல் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவை சென்னை, பெங்களூரு மற்றும் தில்லியின் சில பகுதிகள் போன்ற நகரங்களை ஏற்கென வே தண்ணீர் பற்றாக்குறைக்குத் தள்ளியுள்ளன. ‘டே ஜீரோ’ என்பது வெறும் தண்ணீர்ப் பிரச்சனை மட்டு மல்ல என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா. பேரிடர் இடர் குறைப்பு அலுவலகத்தின்படி, நீர்மட்டச் சரிவு பொது சுகா தார அவசர நிலைகள், உணவு விநியோகத் தடைகள், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சமூக அமைதியின்மை ஆகிய வற்றைத் தூண்டக்கூடும்.

இதனால் நலிவடைந்த சமூகங் கள், மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கலாம்.

2022 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. கணிப்புகளின்படி, தற்போதைய நுகர்வு மற்றும் மேலாண்மைப் போக்குகள் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் பேர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்ளக்கூடும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ் வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

எதார்த்தமாகிறதா தண்ணீர் பிரச்சனை? 2024 ஆம் ஆண்டின் ஐ.நா. உலக நீர் மேம்பாட்டு அறிக்கை, தற்போது 230 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் வாழ்வதாகவும், பல முக்கிய நகரங்கள் அபாயகரமான குறைந்த நீர் இருப்பு அளவை நெருங்கி வருவதாகவும் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், மழைப்பொழிவு மேலும் சீரற்றதாக மாறியுள்ளதால், நீர் திட்டமிடலும் சேமிப்பும் கணிக்க முடியாததாகி வருகின்றன. பெரும்பாலும் ஒரு பாதுகாப்பு வலையாகக் கருதப்படும் நிலத் தடி நீரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. யுனெஸ் கோவின் 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நிலத்தடி நீர் அறிக்கையின்படி, உலகின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலை கள், அவை இயற்கையாக மீண்டும் நிரம்பும் வேகத்தை விட வேகமாக வற்றி வருகின்றன. தண்ணீர் நெருக்கடி என்பது தற்போது ஏதோ ஒரு வடிவத்தில் எதார்த்தமாகிவிட்டது. இன்றைக்கு எதார்த்தமாக தெரியும் தண்ணீர் பிரச்சனை வரும்காலங்களில் உயிரினங் களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்கு பெரும் கேடுகளை ஏற்படுத்தக் கூடும். பாரம்பரியமாக, மனிதகுலம் தனது நீர் விநியோகத் திற்காக ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத் தடி நீரைச் சார்ந்துள்ளது. இந்த அமைப்புகள் இன்றியமை யாதவை. இப்போது, உலகின் தொழில் வளர்ச்சியால், இன்னும் பல இடங்களில் நீரின் தேவை, விநியோகத்தை விட அதிகமாகப் போகிறது. நீர் என்பது H2O மட்டும்தானா? ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் வெறுமனே ஒன்றாகக் கலப்பதால் தண்ணீர் உருவாகி விடாது. அணுக் களிலிருந்து நம்மால் தண்ணீரை எளிதாக உருவாக்க முடி யாது. இப்போது காற்றிலிருந்து நீரைச் சேகரிப்பதிலும், ஈரப் பதத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதிலும் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், காற்றிலிருந்து நீரைச் சேகரிப்பது குறித்த பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. இதற்கும் மேலாக, உலகின் சில பகுதிகளில் இன்னும் சுத்தமான நீர் கிடைப்பதில்லை. பூமியில் 71% நீர் இருந் தாலும், அதில் பெரும்பாலானவை உவர்நீராக இருப் பதால் குடிப்பதற்கு உகந்ததல்ல. பூமியின் நீரில் வெறும் 2% மட்டுமே நன்னீராகவும் குடிப்பதற்குப் பாதுகாப் பானதாகவும் உள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட நீர், நம்மால் சென்றடைய முடியாத துருவப் பனிப் பகுதிகளில் அமைந்துள்ளது. நம் வீடுகளிலும், பணியிடங்களிலும் தண்ணீரை நாம் மிக எளிதாகப் பெறுவதால், அது ஒரு வரையறுக்கப்பட்ட வளம் என்பதையும், ஒருநாள் அது தீர்ந்து போகக்கூடும் என்ப தையும் மறந்து விடுகிறோம். விண்ணும் மண்ணும் விஞ்ஞானிகள் பூமியில் நீரை உருவாக்குவதிலும் சேகரிப் பதிலும் மட்டும் ஆர்வம் காட்டவில்லை. அவர்களின் ஆராய்ச்சி விண்வெளியின் தொலைதூரப் பகுதிகள் வரை நீள்கிறது. நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஹைட் ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை மறுசுழற்சி செய்து நீரை (மற்றும் மீத்தேன் வாயுவை) உருவாக்க, தங்களின் நீர் மீட்பு அமைப்பைச் சார்ந்துள்ளனர். நமக்கு இங்கு கிடைக்கும் மழைநீர் மற்றும் நீர்த்தேக்கங்கள் விண்வெளியில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே நீரின் அளவு இன்னும் குறைவாகவே உள்ளது. விண்வெளியிலிருந்து நம்மால் நீரைச் சேகரிக்க முடிந்தால் அது மிகவும் பயனாக இருக்கும். ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம்? செயற்கைக்கோள்கள் காலநிலை மாற்றங்கள், மாசுபாடுகளை கண்காணிக்கப் பயன்படுகின்றன. விண்வெளி தொழில்நுட்பங்கள் பூமியில் நமது இருப்பிடம் (ஜிபிஎஸ்) அறிதல், நீர் சுத்திகரிப்பு முறைகள் ஆகியவற்றுக்கு உதவுகின்றன. தற்போதைக்கு, உலகளாவிய அல்லது கோள அளவில்கூட நீரைச் சேகரிப்பது என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. விண்வெளியை ஆராயும் விஞ்ஞானிகள், எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியையும் கவனத்தில் கொண்டு, அவற்றை பாதுகாப்பதற்கும் மழைக் காலங்களில் நீர் வீணாகாமல், மக்களுக்கு குடிநீராகப் பயன்படுவதற்கும் ஏதேனும் ஆராய்ச்சிகளை-திட்டங்களை கொண்டு வருவது அவசியமாகிறது. ஏஐ நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறதா? செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை இருகரம் விரித்து வரவேற்ற மாநிலங்கள், தற்போது ஒரு கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. செயற்கை நுண்ணறிவின் வேகத்திற்கு அவற்றின் நீர் விநியோகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த மையங்கள், தங்களின் செயல்பாடுகளைக் குளிர்விக்க, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சில்லுகளுக்கு ஆற்றலளிக்கும் செயலிகளைக் குளிர்விக்க, பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.

தரவு மையங்கள் வருவதற்கு முன்பே சில மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மற்ற மாநிலங்கள் போதுமான நீர் உள்கட் டமைப்பு இல்லாமை, குறைந்த நீர் சேமிப்புத் திறன் மற்றும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான நிலத்தடி நீர் இல்லாமை போன்ற வேறுவித நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. செயற்கை நுண்ணறிவு மையம் ஒரு பொருளாதார வாய்ப் பாகத் தோன்றுகிறது.

இதில் நாம் கவனமாக இல்லாவிட் டால், ஒரு பெரும் வள நெருக்கடியாக மாறக்கூடும். நீர் மேலாண்மை அமைப்பு அவசியம் நீரின் தேவையையும் அதைச் சேமித்து வைப்பதன் அருமையையும் உணர்ந்து நீர் மேலாண்மை என்னும் சிறப் பான அமைப்பை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். சங்க கால மக்கள் நீர் மேலாண்மைக் குழு அமைத்து மழைநீர் சேகரிப்பு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் என்று வாழ்ந்து வந்ததை சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

சங்ககால மக்கள் நீரைத் தடுக்க கரும்பின் கழிகளையும் மணல் மூட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதற்கும் கட்டுப்படாமல் நீர் மிகுந்தால் கல்லாலான தடுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். இது கற்சிறை, கல்லணை என்று அழைக்கப்பட்டது.

இப்போது நாம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பூமியின் கருப்பை வரை உறிஞ்சுகிறோம். மறைந்த விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார், “நீரை வானிலிருந்து வர வையுங்கள். பூமிக்குள் தேடாதீர்கள்” என்ற கருத்தை முன்மொழிந்தார்.

நாம் வீணாக்கும் ஒரு குவளை நீரை மீண்டும் உற்பத்தி செய்ய மேகங்கள் பெரும் பிரயத் தனம் செய்ய வேண்டும்” என்றார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், தண்ணீர்ப் பற்றாக் குறையை போக்கவும் தமிழக அரசு 2001 ஆம் ஆண்டு முதல் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக்கியுள்ளது. அந்தக் காலத்தில் மக்களே அவரவர் வாழ்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை, அதற்கென ஆள்க ளை நியமித்து பாதுகாத்தனர். ஆனால் இன்றைக்கு, மணல் சுரண்டல் மூலம் ஆறுகள் எல்லாம் அழிந்து கொண்டி ருக்கின்றன. நீர்நிலைகளில் கழிவுகள் கலக்கப்படுவதன் மூலம் மாசடைந்து கொண்டிருக்கின்றன. மரங்களும் மழையும் ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!’ - இந்த உண்மை மொழியை அறியாதவர் இல்லை. மழை பெய்வதற்கு மரங் கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மரங்கள் மழையை உருவாக்குகின்றன என்றும், அதிக தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அதிக மழை பெய் கிறது என்ற கருத்தை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன.

மரங்கள் தங்கள் வேர்கள் மூலம் பூமியிலுள்ள நீரை உறிஞ்சி, இலைகள் வழியாக நீராவியாக வளிமண்டலத் திற்கு அனுப்புகின்றன.

இந்த நீராவி காற்றில் கலந்து குளிர் வடைந்து மேகங்களாக மாறுகின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மழையாகப் பொழிகிறது. மரங்கள் அதிக சூரிய ஒளியை ஈர்த்து, சுற்றிலும் குளிர்ச்சியான சூழலை உருவாக்குகின்றன.

இந்த குளிர்ச்சியான காற்று மழையை ஈர்க்கும் சக்தி கொண்டது. மழைக்காலங்களில் அதிகளவில் புதிய செடிகள் மற்றும் மரக்கன்றுகள் முளைத்து இயற்கைச் சூழல் சமநிலை அடை கிறது. சராசரியாக 40% அல்லது அதற்கு மேல் நிலப்பரப் பில் பெய்யும் மழையின் பெரும்பகுதி, ஆவியாதல் மற்றும் தாவரங்களிலிருந்து ஏற்படும் நீராவிப்போக்கு ஆகியவற் றால் உருவாகிறது.

மரங்களின் பயனறிந்து, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒரு லட்சம் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மாற்றத்தை ஏற்படுத்தும் நேரம்... நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை எல்லாம் நிறைவேற்றாமல் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற முழக்கங்களுக்கு எந்தவித அர்த்தமும் இல்லை.

இப்போ தெல்லாம் நீர் இல்லை என்ற குரல்கள் எந்தளவுக்கு அதிகரித் துள்ளனவோ, அதைவிடப் பன்மடங்காக நீரை வீணடிப் போரும் இருக்கின்றனர். இயற்கையை அழித்துவிட்டு மனிதன் வாழ நினைத் தால், அது மனிதனை அழித்துவிடும்.

தண்ணீர் பற்றாக் குறை சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

நம்மிடம் அறிவும், வளங்களும் உள்ளன; மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளும் இருக்கின்றன. அதனால் செயல்படுவதுதான் முக்கியம். அதுவும் இப்போதே.

நாம் புதிய தொழில்நுட் பங்களை ஏற்றுக்கொண்டு, நீரைப் பயன்படுத்தும் முறை யை மறுவடிவமைத்து, அனைவருக்கும் நீர் கிடைக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம்!.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.