‘குளோபல் ரைஸ் 2026’ மாநாடு
24 Sept 2026, 11:35 pm

‘குளோபல் ரைஸ் 2026’ மாநாடு

கோவை, செப்.24-கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் புதனன்று, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான ‘குளோபல் ரைஸ் 2026’ மாநாடுநடைபெற்றது.

‘எஸ்.எம்.பி கனெக்ட்’ அமைப்பு நடத்திய இந்த நிகழ்வில், கோவை மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 150 தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். ஜவுளித் துறை மட்டுமின்றி,இன்ஜினியரிங், மோட்டார்கள் மற்றும் ஆட்டோ பாகங்கள் தயாரிப்பில் கோவை ஏற்கனவே உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்த உள்நாட்டு திறனை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சர்வதேச சந்தைகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பது குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ’இண்டோ டெக்னாலஜி’ இயக்குனர் ஜெயவர்தன், ’ஸ்டார்ட்அப் எக்ஸ்பெர்ட்ஸ்’ நிறுவனர் ஷியாம் சேகர், ’லட்சுமி ரிங் டிராவலர்ஸ்’ துணைத் தலைவர் ஜே.எம். பாலாஜி உள்ளிட்ட பல துறை சார்ந்த வல்லுநர்கள் பேசினர். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு வளர்வது குறித்தும், சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் விளக்கமளித்தனர்.

நிகழ்வின் இறுதியில், சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு ’குளோபல் ரைஸ் விருதுகள்’ வழங்கப்பட்டன. அகமதாபாத், புனே, புவனேஸ்வர், பாட்னா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து கோவையில் 5-வது பதிப்பாக நடைபெற்ற இம்மாநாடு, அடுத்ததாக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.