தீக்கதிர் உலக செய்திகள்
20 Aug 2026, 9:54 pm

இங்கிலாந்து : இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

2026 இந்த முதல் ஆறு மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் நடவடிக்கைகள் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுதோறும்பதிவாகும் தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக ‘டெல் மாமா’ எனும்அமைப்பு தெரிவித்துள்ளது. 2021 இல் 313, 2022-இல் 818, 2025 இல் 1,909 , 2026 ஜூன் மாத இறுதி வரை, ‘1,031தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னாலும் ஒரு இங்கிலாந்துகுடிமகன் உள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா ஊழியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பு

2025 இல் உலகளவில் 907 ஐ. நா மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ அல்லதுகடத்தப்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த காலங்களை ஒப்பிடும் போது மிக அதிகம் என ஐ.நா அவை மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025-இல், உலகம் முழுவதும் மொத்தம் 350 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் காசா பகுதியில்மட்டும்186 பேரும், சூடானில் 71 பேரும் அடங்குவர். 2026-ஆம் ஆண்டில் இதுவரை, உலகம் முழுவதும் 82நிவாரணப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 97 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 39 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று தரவுகள்காட்டுகின்றன.

கடும் மழை, வெயில் : ஆப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதத்தில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என கிழக்குஆப்பிரிக்காவின் காலநிலை முகமைகள் எச்சரித்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் கொம்பு (Greater Horn of Africa)பிராந்தியம் முழுவதும் மழையை அதிகரிக்கும். இதனால் வெள்ளம், நிலச்சரிவுகள், சுரங்க விபத்துக்கள் அதிகரிக்கும் ஆபத்து எழுந்துள்ளது. அதேபோல இப்பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விடஅதிகவெப்பம் இருக்கும் என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் மற்றும் உருவாகிவரும் எல் நினோகாரணமாக இந்த விளைவுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அமைச்சருக்கு பிரான்ஸ் கண்டனம்

“இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்வீரின் தினமும் 30-40 பாலஸ்தீனர்களை படுகொலை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அக்கருத்துக்கள் சகித்துக் கொள்ள முடியாதவைமனிதத்தன்மையற்றவை” என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்-நோயல் பாரோ கண்டித்துள்ளார்.மேலும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரையில் இன்று நடப்பவை முற்றிலும் அவமானகரமானவை மற்றும்நம் அனைவரையும் கோபப்படுத்த வேண்டியவை. இதனால்தான் அமைச்சர் பென்-க்வீர் மீது நாங்கள் தடைகளைவிதித்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருத்தம்

ஆகஸ்ட் 19 அன்று வெளியான தீக்கதிர் 4ஆம் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் அவர்கள் சேலத்தில் ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது. இது சேலத்தில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்திய சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கில் ஆற்றிய உரையாகும். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்திய கருத்தரங்கம் என தவறுத

லாக இடம் பெற்றுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்

ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாத குழுக்களுக்கு பிரான்ஸ் நேரடி உதவி உக்ரைன் ராணுவத்துக்கும் தொடர்பு - ரஷ்ய அமைச்சர் குற்றச்சாட்டு

மாஸ்கோ,ஆக.20-ஆப்பிரிக்காவின் சாஹேல் (Sahel)பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பயங்கரவாதக் கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அமைதியின்மையை உருவாக்கி வருகின்றன. இந்த பயங்கரவாத கும்பல்களுக்கு பிரான்ஸ் நேரடியாக உதவுகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்பிரிக்காவில் செயல்படும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகின்றன. இந்நிலையில் அத்தகைய பயங்கரவாத தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பேசிய செர்ஜிலாவ்ரோவ் உக்ரைன் ராணுவத்தின் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகதெரிவித்துள்ளார். போரில் ஈடுபடும் கூலிப்படையினருக்குப் பதிலாக உக்ரைனின் ராணுவமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது அரசே முன்னெடுக்கும் நடவடிக்கை என்பதைதான் காட்டுகிறது.

ஏழை நாடுகளை கடந்த காலத்தில்நேரடி காலனி நாடுகளாக வைத்திருந்தநாடுகள் தான் ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன. பிரான்ஸ் தான் நேரடியாகச் சட்டவிரோத ஆயுதக் குழுக்களுடன் இணைந்துசெயல்படுகிறது. அவர்களுக்கு ஆயுதம் வழங்குகிறது, நிதியளிக்கிறது மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறது.இது ஒன்றும் ரகசியமல்ல என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.முக்கியமாக, தங்களை காலனி நாடாக வைத்திருந்த ஆதிக்க நாடுகளுடனான தொடர்பை முழுமையாக துண்டித்துக் கொள்ள முடிவெடுத்து, அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குள் எப்படி பிரச்சனைகளை உருவாக்குவது என்பது குறித்து பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் பயிற்சியளிக்கிறது என்றும் லாவ்ரோவ்குறிப்பிட்டுள்ளார்.

சாஹேல் பிராந்திய நாடுகள் 2012 முதல் ஜிகாதி தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்துபோராடி வருகின்றன. பல வருடமாக நடக்கும் தொடர் மோதல்கள், அதனால் ஏற்படும் மக்கள் இடம்பெயர்வுஇவற்றுடன் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் காலநிலை சார்ந்த பாதிப்புகள் காரணமாக அந்நாடுகளில் மிகக் கடுமையான மனிதநேய நெருக்கடிகள் உருவாகியுள்ளது. பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய மூன்று நாடுகளிலும் ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியது. அவை பிரான்ஸ் ஆதிக்கத்துக்கு ஆதரவான அரசுகளை தூக்கி எறிந்த ஆட்சியை நடத்தவருகின்றன. இவை 2023 இல் பிரான்ஸ் அரசுடனான பாதுகாப்பு உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. அதன் பிறகு, ஜிகாதி தீவிரவாதிகளை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக பிரான்ஸ் மீது குற்றம் சாட்டின. அதனைத்தொடர்ந்து ‘சாஹேல் நாடுகளின் கூட்டமைப்பை’ உருவாக்கி ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளன. சாஹேல் பிராந்தியம் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தின் உலகளாவிய மையப்பகுதியாக மாறியுள்ளது என கானா வெளியுறவுத்துறை அமைச்சர் சாமுவேல் ஒகுட்செட்டோ அப்லாக்வாவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் நைஜர், புர்கினா பாசோ, மாலி ஆகிய நாடுகளுக்கு ஆதரவளிக்க ரஷ்யாவும் கானாவும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.