தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

9 Jul 2026, 9:20 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

சூடானில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமே இல்லை : யுனிசெஃப் தகவல்

நான்கு ஆண்டாக சூடான் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நீடிக்கிறது. தற்போது அங்கு பாதிக்கப்பட்ட பகுதி களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமே இல்லை என்று ஐ.நா அவையின் குழந்தைகள் நிதியம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இந்தப் போர் அந்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிதைத்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதத்தில் மட்டும் 330 குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர். பலர் கடத்தப்பட்டுள்ளனர்.பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகளும், சுமார் 1 கோடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளை உலக அளவில் மேம்படுத்தாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஒருவர் புற்றுநோயிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு, அவர் வசிக்கும் நாட்டை பொறுத்தே அமைகிறது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழக்கிறார். ஆப்பிரிக்க நாடுகளில், உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது.

சீனாவில் கடும் வெள்ளம் : பலி 39ஆக உயர்வு

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மீட்புக் குழுவினர் டிரோன்கள் மூலம் உணவுகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்து வருகின்றனர். இந்த வெள்ளத்திற்கு மத்தியில், இந்த வார இறுதியில் ஒரு ‘சூப்பர் டைஃபூன்’ (சூறாவளி) சீனாவின் கிழக்கு மாகாணங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சீனாவில் இயற்கை பேரிடர் அபாயம் அதிகரித்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்: ஐநா கவலை

காங்கோவில் எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மே மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. சில பிரச்சனைகளில் எபோலா சிகிச்சை மையத்தை தீயிட்டுக் கொளுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிகிச்சை நிலையங்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். இல்லையெனில், நோயைக் கட்டுப்படுத்தும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுடன் லெபனான் ஒப்பந்தம் : ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரிப்பு

இஸ்ரேலை எதிர்கொள்ளத் தங்கள் அமைப்பு தொடர்ந்து “களத்தில்” இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் நயிம் காசிம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பதிலாக லெபனான் அரசு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. அந்த ஒப்பந்தத்தை சட்ட விரோதமானது, இந்த ஒப்பந்தம் வெற்றி பெறாது, இதன் எந்தவொரு விதியையும் லெபனான் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அதனை நிராகரிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பொருளாதார நெருக்கடி சக ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக தீவிரமடையும் அந்நிய வெறுப்பு

கேப் டவுன், ஜூலை 9- தென் ஆப்பிரிக்காவில் சக ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக அந்நிய வெறுப்பு பிரச்சாரமும் தாக்குதல்களும் தலை தூக்கியுள்ளது. இனவெறிப் பாகுபாடுகள் (Apart heid) நிறைந்த ஆட்சி முடிந்து 30 ஆண்டுகள் கடந்தும், தென் ஆப்பிரிக்கா வில் இன்னும் பெரும் பொருளாதார சமத்துவமின்மை நிலவுகிறது. அந்நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே மிக அதிக வேலையின்மை நிலவுகின்றது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, பள்ளிகளில் சேவைகள் மோசமடைந்துள்ளன. பொது நிறுவனங்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்ட தால், மக்கள் போதிய சேவைகள் கொ டுக்காமல் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் மக்களின் கோபம் தம் மீது திரும்பி விடக் கூடாது என தென் ஆப்பிரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகள், வீடுகள் மற்றும் மருத்துவ வசதிகளை புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்கிறார்கள் என்ற அந்நிய வெறுப்பு கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தால் மக்களிடையே தீவிரமாக பரப்பப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ள சக ஆப்பிரிக்க மக்கள் மீதே தென் ஆப்பிரிக்கர்கள் கோபமடைந்துள்ளனர். இதன் விளைவாக முறையான ஆவணம் இன்றி தென் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ள அண்டை நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தீவிர இனவெறிப்பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சில போராட்டக் குழுக்கள் ஜூன் 30 க்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதித்திருந்தன. அந்தத் தேதி முடிவடைந்த நிலையில், கலவரங்கள் வெடிக்கும் அபாயம் எழுந்தது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. எனினும் பல இடங்களில் போராட் டங்கள் வெடித்து வன்முறைகள், சூறை யாடல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. சில போராட்டக் குழுக்கள், புலம்பெயர்ந்தோரை அடை யாளம் கண்டு ‘குடிமக்கள் கைது’ (Citizen Arrest) செய்ய முயல்கின்றனர். புலம் பெயர்ந்தோரால்தான் வேலை யின்மை ஏற்படுகிறது என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. தென் ஆப்பிரிக்காவின் வேலையின்மை என்பது நாட்டின் கட்டமைப்பில் உள்ள ஒரு நீண்டகாலப் பிரச்சனை. நாட்டில் நடைபெறும் குற்றத்திற்கும் புலம்பெ யர்வுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. வறுமைக்கும் வேலையின்மைக்கும் தான் குற்றச் செயல்களுடன் அதிகத் தொடர்பு உள்ளது என நிபுணர்கள் குறிப் பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தங்களின் பொருளாதாரத்தை மேம் படுத்த வேண்டும் என்று எதிர்காலத்திட் டங்கள் முன்வைக்கப்பட்டு வரும் வேளை யில், சக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், அக்கண்டத்தின் ஒற்று மைக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.