தீக்கதிர் உலக செய்திகள்
1 Jul 2026, 9:02 pm

உக்ரைனுக்கு நேட்டோ உதவுகிறது: ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யாவின் எல்லைக்குள் இருக்கும் முக்கிய இடங்களைத் தாக்குவதற்கு தேவையான நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க நேட்டோ வெளிப்படையாக உதவுகிறது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியு றவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு, உக்ரைனைத் தனது ராணுவக் கூட்டமைப்புக்குள் முழுமையாக இணைக்கப் பார்க்கிறது. இது ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிடுவதற்கு வழிவகுக்கும் ஒரு ஆபத்தான விளையாட்டு என்று கூறியுள்ளார்.

சிரியாவையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் : ஈரான் பேராசிரியர்

தெற்கு லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றப்பட வில்லை. இது கிரேட்டர் இஸ்ரேல் திட்டத்திற்கான ஆக்கிரமிப்பு ஆசையைக் காட்டுகிறது. ஈரானுடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தை அமெ ரிக்கா மதிக்கவில்லை என ஈரான் பல்கலைக்கழக பேராசிரியர் சையத் முகமது மரண்டி குற்றம் சாட்டி யுள்ளார். மேலும் இஸ்ரேல் தனது எல்லையை விரிவுபடுத்தி, லெபனான் மற்றும் சிரியாவைக் கைப் ழுற்றத் துடிக்கிறது. இது அவர்களின் ‘கிரேட்டர் இஸ்ரேல்’ (Greater Israel) திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றும் எச்சரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக மக்கள் பேரணி

பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக அரசு கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் பிரம்மாண்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலாக மாறி யது. இந்தப் போராட்டத்தின் தாக்கம் பிலிப்பைன்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளையும் பாதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் உருவானது.

அமெரிக்கா-ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்த த்துடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே யான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்காவின் செய லின் காரணமாக அந்நாட்டு அதிகாரிகளை ஈரான் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பேசவில்லை மறை முகமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரு கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17 அன்று இரு நாடுகளும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தே இந்த பேச்சுவார்த்தையில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பா நோக்கி நகரும் வெப்ப அலை

ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிகக் கடுமை யான வெப்ப அலை தற்போது சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு ஐரோப்பாவை வாட்டி வதைத்த வெப்ப அலை, தற் போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. அந்த கண்டத் தில் உள்ள 9.5 கோடிக்கும் அதிகமான மக்கள் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தின் ஆரம்பத்திலேயே ஐரோப்பிய கண்டம் இத்தகைய வெப்பநிலையை எதிர் கொண்டதில்லை. இதன் காரணமாக அங்கு நிலை மை மிகவும் மோசமடைந்துள்ளது.

சிரியா மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

டமாஸ்கஸ், ஜூலை 01- சிரியாவின் மேற்கு டெரா பகுதியில் உள்ள அபிதின் கிராமத்தின் மீது, இஸ்ரேல் ராணுவம் பீரங்கி குண்டுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தி யுள்ளன. இந்த கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரி ழப்புகள் உட்கட்டமைப்பு சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. லெபனான் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது சிரியா மீதும் தாக்குதல் நடத்தி இருப்பது அந்நாட்டு மக்களிடையே இது பெரும் அச்சத்தையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. இதனால் சிரியாவில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வரு கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே, சிரியாவின் தெற்கு மாகாணங்களான டெரா மற்றும் குனைத்ரா பகுதிகளில் இஸ்ரேல் ராணு வத்தின் ஊடுருவல்கள் கணிசமாக அதிக ரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையே கடந்த ஓராண்டிற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தபோதிலும், இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து சிரியாவின் எல்லை இறையாண்மையை மீறி, இத்தகைய தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப் பின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவிடம் டிரம்ப் ஒரு திட்டத்தை முன்வைத்தார். ஆனால், சிரிய ஜனாதிபதி அந்தத் திட்டத்தை நிராக ரித்தார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த அவர், ஹிஸ்புல்லா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தனது நிலப்பாட்டை திடீரென மாற்றினார். சிரிய ஜனாதிபதியின் இந்த மாற்றம், அண்டை நாடுகள் மீதான தனது பிடி கை நழுவிவிடுமோ என்ற பயத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் இந்த அரசியல் நகர்வு, அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கும் அதன் எல்லை ஆக்கிரமிப்பு ஆசைகளுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் காரண மாகவே, சிரிய அரசை மிரட்டும் நோக்கில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப் படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.