தீக்கதிர் உலக செய்திகள்
10 Jul 2026, 8:28 pm

உலகளவில் இரண்டாவது வெப்பமான மாதம்

2026 ஜூன் மாதத்தில் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை, 20-ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.09 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது உலகம் இதுவரை கண்டிராத இரண்டாவது வெப்பமான ஜூன் மாதமாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலிடத்தில் உள்ளது.

உக்ரைன் டிரோன் தாக்குதல் : ரஷ்ய எரிசக்தி கட்டமைப்புகள் சேதம்

ரஷ்யா மீது உக்ரைன் வியாழனன்று இரவு மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாஸ்கோ உட்பட பத்து மாகாணங்களை நோக்கி உக்ரைன் அனுப்பிய 376 டிரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீப நாட்களாக ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் காட்டுத்தீ : 12 பேர் பலி

ஸ்பெயினின் அந்தாலுசியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். கடும் வெப்பம், குறைந்த ஈரப்பதம் மற்றும் பலத்த காற்றின் காரணமாகத் தீ மிக வேகமாக அருகில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தீப்பிடித்த பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் பலர் தீயில் சிக்கிக் கொண்டதாகவும், அதில் சிலரது உடல்கள் வாகனங்களுக்குள் இருந்தே மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுலாவில் நிலநடுக்கம் : உயிரிழப்பு 3,889 ஆக உயர்வு

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,889 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக 16,740 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 17,907 பேர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். இதுவரை 6,462 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து தற்போது வரை 1,142 முறை நில அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளன, இது மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

உக்ரைன்- ரஷ்யா போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் : சீனா

உக்ரைன்-ரஷ்யா போரின் போக்கு மிகுந்த கவலையளிப்பதாக ஐ.நா அவைக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லெய் கூறியுள்ளார். மேலும் மோதலை உடனடியாகத் தணிக்குமாறு இரு தரப்பினரையும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய அவர், உக்ரைன் போரில் இரு தரப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக தீவிரம், பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் உள்கட்டமைப்பு அழிவுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேட்டோ உச்சி மாநாடு ஆயுதத் தொழில்துறைக்கு சாதகமாக உள்ளது

அங்காரா, ஜூலை 10- துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஜூலை 7 முதல் 8 வரை நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாடு, உலக அமைதியை விட ஆயுதத் தொழில்துறையின் லாபத்திற்கே முன்னுரிமை அளித் துள்ளதாக உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) குற்றம் சாட்டியுள்ளது. ஆயுதக் கொள்முதலில் பில்லியன் டாலர்கள் நேட்டோ உறுப்பு நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் தலா 5 சதவிகிதத்தை ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற இலக்கை அடைய முடிவு செய்துள்ளன. இது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் பேசுகை யில், “உறுப்பு நாடுகள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்க ளில் கையெழுத்திட்டுள்ளன” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து நவீன ஆயுதங்களை ஐரோப்பாவிலேயே தயாரிப்ப தற்கான புதிய கூட்டணிகளை உருவாக்கியுள்ளன. மக்கள் நலன் பாதிப்பு நேட்டோவின் இந்த போர் பொருளாதார கொள்கை, பொதுமக்களின் வரிப்பணத்தை ஆயுதத் தயாரிப்புக்கு திருப்பி விடும் நடைமுறை. கல்வி, சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற மக்கள் நலன் சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதை விட, ஆயுதங்களுக்காகச் செலவிடுவது உக்ரைன் போன்ற மோதல்களை மேலும் நீட்டிக்கவே வழிவகுக்கும்” என்றும் எச்சரித்துள்ளது. ஒடுக்குமுறையும் போராட்டங்களும் இந்த மாநாட்டிற்கு முன்னதாக, அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான அரசாங்கம் நேட்டோவிற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான மக்களின் கருத்துரிமையை ஒடுக்கி, போர் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 133 நாடுகளில் உள்ள 10.5 கோடி தொழிலாளர்களை உலக தொழிற்சங்க சம்மேளனம், பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த ஆயுத உற்பத்தி அதிகரிப்பு உலகிற்குப் பேரழிவையே தரும் என்று கூறியுள்ளது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கு ஆசியாவில் ராணுவத் தலை யீடுகளைக் கைவிட வேண்டும். அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். இதுதான் இந்த உலகிற்குத் தேவை என்று வலியுறுத்திய உலக தொழிற்சங்க சம்மேளனம் இந்த ஏகாதிபத்தியப் போர்களுக்கு எதிராகத் தனது இடைவிடாத போராட்டத்தைத் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.