தீக்கதிர் உலக செய்திகள்
23 May 2026, 10:12 pm

எபோலாவை கட்டுப்படுத்த ஐ.நா நிதியுதவி

காங்கோவில் பரவி வரும் எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்து வதற்காக, ஐ.நா-60 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது ‘புந்திபூகியோ’ வகை எபோலா மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ கண்டறியப்படவில்லை. இந்நிலை யில் இத்தொற்று மேலும் பரவாமல் நாம் முன்கூட்டி யே தடுத்தாக வேண்டும் என்றும் ஐ.நா குறிப்பிட் டுள்ளது. உள்நாட்டுப் போர், மக்களின் தொடர் இடப்பெயர்வு காரணமாக இத்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவாகியுள்ளது.

சீன தலையீட்டை தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் டிரம்ப்?

தைவானுடனான உறவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகளவு ஆயு தங்களை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் டிரம்ப் கடந்த வாரம் சீனா சென்ற பொழுது தைவான் தொடர்பான விவகாரத்தில் முறையாக இல்லையென்றால் அது அமெ ரிக்காவுடன் மோதலை உருவாக்கும் என ஜி ஜின்பிங் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தான் தைவானு க்கு செய்ய வேண்டிய ஆயுத விற்பனையை அமெ ரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. எனினும் ஈரானுடன் போரி டுவதற்கு ஆயுத பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கஇந்த முடிவு எடுக்கப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது.

பள்ளி விடுதி மீது உக்ரைன் குண்டு வீச்சு

ரஷ்யாவின் ஸ்டாரோபெல்ஸ்க் நகரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றின் மீது உக்ரைன் குண்டு வீசியுள்ளது. இத்தாக்குதலில் 15 பேரைக் காண வில்லை என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள் ளார். மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொ டுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் இத்தாக்குதலில் குறைந்தது 39 பேர் காயமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளனர். விடுதி இருந்த பகுதி யில் எந்தவொரு ராணுவ தளமும் இல்லாத நிலையில் அக்கட்டடம் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் காலநிலை மாற்றம் வரலாற்று சிறப்பு தீர்மானம்

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமி யைப் பாதுகாக்கத் தவறும் நாடுகள், சர்வதேச சட்டங்களை மீறியதாகக் கருதப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி யிருந்தது. தற்போது ஐ.நா அவையில் காலநிலை மாற்றத்தை தடுக்க தவறும் நாடுகள் சர்தே சச் சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மா னத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம் – ஈரான்

அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் நிலவிய போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் 31 வணிகக் கப்பல்கள் எங்கள் கடற்படையின் பாதுகாப்போடு ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளன என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரி வித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ராணுவ சோதனைச் சாவடிகள், கப்பல் சோதனைக ளையும் ஈரான் நடத்தி வருகிறது. தற்போது சீனா வின் பெய்ஜிங் மற்றும் ரஷ்யா போன்ற ஈரானின் நட்பு நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் உலகம் : உலக வங்கியிடம் அவசரகால நிதியைப் பெற 27 நாடுகள் முயற்சி

வாஷிங்டன்,மே 23- சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக வங்கி யிடம் அவசரகால நிதியை விரைவாகப் பெறுவ தற்காக 27 நாடுகள் நெருக்கடி கால வழிமுறை களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த நிதியை கேட்கும் நாடுகளின் பெயர்கள் மற்றும் எவ்வளவு நிதியை ஒவ்வொரு நாடும் கேட்கின்றன என்ற தகவல்களும் இல்லாமல் உலக வங்கியின் ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது என குறிப் பிட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய நிலை யில் உலக வங்கி பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி 101 நாடுக ளுக்கு “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு அவசரக் கணக்கை” அமைத்துக் கொடுத்துள்ளது. இத் திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் தங்களுடைய பழைய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இன்னும் வாங்காமல் வைத்திருக்கும் தொகையில், 10 சதவிகிதம் வரை எடுத்து, தற்போதைய அவசர நெருக்கடியைச் சமாளிக்க உடனடியாகப் பயன் படுத்திக் கொள்ள முடியும். இதற்காக அவர்கள் புதுக் கடன் வாங்க வேண்டியதில்லை.

2026 பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெ ரிக்காவும் ஈரான் மீது முதலில் போர் தொடுத்தன. இதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பொரு ளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக உலகளாவிய வணிகப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வளரும் நாடுக ளுக்குச் செல்ல வேண்டிய அத்தியாவசிய உரக் கப்பல்களும் தடைபட்டுள்ளன. இத்தகைய சூழலில் உலக நாடுகளில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் பின்னணியில் தான் 27 நாடுகள் அவசர கால நிதியைப் பெற முயன்று வரும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியிடமிருந்து இந்த நிதி உதவியைப் பெற முயற்சிப்பதாக கென்யா மற்றும் இராக் நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக வங்கியிடம் கேட்டுள்ளது போலவே சர்வதேச நாணய நிதியத்திடமும் சுமார் 12 நாடுகள் 20 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் வரை குறுகிய கால உதவியை எதிர்பார்ப்பதாக அவ்வமைப்பின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய வளர்ச்சிக் கொள்கை மையத்தின் இயக்குநர் கெவின் கல்லாகர் இது பற்றி கூறுகையில், உலக நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதை விட உலக வங்கியிடமே நிதி கேட்க விரும்புகின்றன.

ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்கும் போது சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் பல மக்கள் நலத்திட்டங்களை வெட்டவும் வரிகளை அதிகரிக்கவும் நிபந்தனையாக விதிக்கின்றது. இது கென்யா போன்ற நாடுகளில் ஏற்கெனவே நிலவி வரும் பொருளாதார நெருக்கடி யையும், மக்கள் போராட்டத்தையும் மேலும் தீவிரமாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.