முந்தய பக்கம்

உலகப் பொருளாதார மந்த நிலை அபாயம்

13 May 2026, 8:59 pm
உலகப் பொருளாதார மந்த நிலை அபாயம்

உலகப் பொருளாதார மந்த நிலை அபாயம்

ரஷ்ய அமைச்சர் எச்சரிக்கை

மாஸ்கோ, மே 13 - ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது வரும் காலத்தில் உணவு மற்றும் உரங்களின் விலை உயர்வதற்கும், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று ரஷ்ய நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் எச்சரித்துள்ளார். கச்சா எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளும், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளும் இந்த விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சர்வதேச சூழல் உலகப் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்துகின்றன. உலக நாடுகளின் நிதிநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பணவீக்க அழுத்தத்தையும் அதிகரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கணிக்கக்கூடிய மற்றும் நிலையான நிபந்தனைகள் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் பொருளாதார வளர்ச்சி மற்றும் குடிமக்களின் வருமானத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை தீர்வுகளும் காணப்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram