தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிளன்மார்கன் பகுதியில் சோலை மரங்கள் நடுவதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு

14 Jun 2026, 1:37 am
கிளன்மார்கன் பகுதியில் சோலை மரங்கள் நடுவதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு
<p><strong>கிளன்மார்கன் பகுதியில் சோலை மரங்கள் நடுவதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு</strong></p><p>உதகை, ஜூன் 13- கிளன்மார்கன் பகுதியில் சோலை மரங் கள் நட குழி தோண்ட பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டியுள்ள மசின குடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட் டங்கள், முக்குறுத்தி தேசிய பூங்கா ஆகி யவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக அமைந்துள்ளன. இங்கு புலிகள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பூச்சி இனங்களும், அரிய வகை பறவைகளும் வசித்து வருகின்றன. மேலும், பல்வேறு வகையான மரங்கள் மற் றும் செடிகள் உள்ளன. வனவிலங்குகள் நல னுக்காக வனப்பகுதி அதிகரிக்க வனத்துறை யினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் அந்நிய தாவ ரங்களை அழித்து புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக உதகையை அடுத்த கிளன்மார்கன் கெஜ்மட்டம் பகுதி யில் வனத்துறை சார்பில் ஆராய்ச்சி நோக் கங்களுக்காக சோலை மரக்கன்றுகள் நடுவ தற்காக நூற்றுக்கணக்கான குழிகள் தோண் டப்பட்டு வந்தன. இதன் காரணமாக எருமைக ளுக்கு தேவையான தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பழங்குடியின தோடர் இன மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு எந்தவித தகவலும் கொடுக்காமல் நூற்றுக் கணக்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுபோல் சோலை மர காடுகளுக்காக குழி கள் தோண்டப்பட்டதால் எருமைகளுக்கு தீவ னம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்க னவே எருமை வளர்ப்பில் பல்வேறு சவால் களை சந்தித்து வரும் நாங்கள், தற்போது தீவன பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்க ளுக்கு எருமைப்பால் விற்பது மற்றும் விவ சாயிகளுக்கு எருவை உரமாக வழங்குவது மூலமே எங்கள் வாழ்வாதாரம் அமைந்துள் ளது. இப்போது எங்கள் வாழ்வாதாரம் பாதிக் கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர் பாக, வன உரிமைச் சட்டத்தின் கீழ் வனத் துறையிடமிருந்து உரிமைகளைக் கோரி சமீ பத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத் தில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கான ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், எங்கள் அனுமதியின்றி எங்கள் நிலத்தை வனத்துறை கையகப்ப டுத்துவது அப்பட்டமான விதிமீறலாகும், இந்த பணிகளை முற்றிலும் கைவிட வேண் டும், என்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழங்குடியினரால் பல தலை முறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் குழிகள் தோண்டி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. மரங்கள் வைக்கப்படு வதன் மூலம் காடுகள் வளம் அதிகரிக்கும் என்பதால் இந்த பணிகளை செய்ய முடிவு செய்தோம். தற்போது தற்காலிகமாக பணி கள் நிறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.