குதிரைகளுக்குப் பரவும் ‘கிளான்டர்ஸ்’ தொற்று சென்னையில் குதிரை சவாரிகளுக்கு கட்டுப்பாடு
21 May 2026, 12:33 am
<p><strong>குதிரைகளுக்குப் பரவும் ‘கிளான்டர்ஸ்’ தொற்று சென்னையில் குதிரை சவாரிகளுக்கு கட்டுப்பாடு</strong></p><p>சென்னை, மே 20- சென்னையில் கடந்த சனிக்கிழமை குதிரை ஒன்று ‘கிளான்டர்ஸ்’ என்ற அதி தீவிர பாக்டீரியா தொற்றால் உயிரி ழந்ததை அடுத்து, சென்னை மாநகராட்சி யும் கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து நகரில் உள்ள பல்வேறு லாயங்கள் மற்றும் குதிரை வண்டிகளில் இருந்து 80 குதிரைகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்துள்ளன. சென்னையில் சுமார் 230 குதிரைகள் உள்ள நிலையில், இந்தத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குதிரை சவாரி செய்வதற்கு தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பரிசோதனை முடிவுகள் வரும் வரை குதிரைகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. குதிரைகளுக்குக் காய்ச்சல், மூக்கிலி ருந்து நீர் வடிதல், தோல் புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடி யாகத் தெரிவிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. குதிரைகளுக்கு முறையான மருத்துவப் பராமரிப்பும், தடுப்பூசிகளும் போடப்படாததே இதுபோன்ற தொற்றுக்குக் காரணம் என விலங்கின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குதிரைகளுக்கு உரிமம் மற்றும் மைக்ரோசிப் பொருத்து வதைக் கட்டாயமாக்கிச் சென்னை மாநகராட்சி ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வ லர்கள், நகரில் குதிரை சவாரிகளை முற்றி லுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
