ஆபத்தான “கிளாண்டர்ஸ்” நோய் தொற்றால் குதிரை பலி குதிரைகளைத் தனிமைப்படுத்த உத்தரவு!
17 May 2026, 2:01 am

ஆபத்தான “கிளாண்டர்ஸ்” நோய் தொற்றால் குதிரை பலி குதிரைகளைத் தனிமைப்படுத்த உத்தரவு!

சென்னை, மே 16: சென்னையில் குதிரைகளைத் தாக்கும் ஆபத்தான “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை ஒன்று பரிதாப மாக உயிரிழந்துள்ளது.

இந்த நோய் மனிதர் களுக்கும் பரவும் அபாயம் கொண்டதால் மருத்துவத்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகரில் குதிரை வண்டிகள், சவாரி மற்றும் விளையாட்டுப் பணிகளுக் காக ஏராளமான குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் குதிரை ஒன்றுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பரிசோதனை செய்ததில் அதற்குப் பாக்டீரியாவால் பரவக்கூடிய கொடிய “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தீவிரக் கண்காணிப்பில் இருந்த அந்தப் பாதிக்கப் பட்ட குதிரை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தது.

இந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட குதிரை யுடன் தொடர்பில் இருந்த மற்றும் அதற்கு அருகில் இருந்த அனைத்துக் குதிரை களையும் உடனடியாகத் தனிமைப்படுத்த கால்நடைப் பராமரிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சென்னை முழுவதும் உள்ள நூற்றுக் கணக்கான குதிரைகளுக்கு “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அவசரப் பரிசோதனை நடத்தவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ மற்றும் கால் நடைத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கையில், “கிளாண்டர்ஸ் என்பது குதிரை, கோவேறுகழுதை போன்ற விலங்கு களைத் தாக்கும் ஒரு ஆபத்தான தொற்று நோயாகும்.

இது பாதிக்கப்பட்ட விலங்கு களின் சளி, ரத்தம் அல்லது கழிவுகள் மூல மாக, அதனைக் கையாளும் மனிதர்களுக் கும் பரவக்கூடிய (Zoonotic Disease) அதிக ஆபத்து கொண்டது.

எனவே, குதிரை வளர்ப் பவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனை வரும் தீவிரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குதிரைகளுக்குச் சளி, காய்ச்சல் அல்லது தோலில் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிக ளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.