முந்தய பக்கம்

பாமகவில் இருந்து விலகத் தயார் ஜி.கே.மணி பேட்டி

15 Dec 2025, 2:48 pm
பாமகவில் இருந்து விலகத் தயார் ஜி.கே.மணி பேட்டி
<p><strong>பாமகவில் இருந்து விலகத் தயார் ஜி.கே.மணி பேட்டி</strong></p> <p>சென்னை, டிச. 15- பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி, &nbsp;சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனது &nbsp;இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து &nbsp;பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. அன்பு மணியின் செயல்பாடுகளால்தான் ராம தாஸ் கண்ணீர் வடிக்கிறார். ராமதாஸ், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசுப் பணிக்கு போகமாட்டோம் என்று கூறினார். இந்த நேரத்தில், அன்புமணி என்னிடம் வந்து ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கக் கூறினார். நானும், மறைந்த காடுவெட்டி குருவும் &nbsp;ராமதாசிடம் பேசிய பிறகு ராமதாஸ் ஒப்புக்கொண்டார். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போக வேண்டும் என்று ராம தாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத்தான் மாநிலங் களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் &nbsp;பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார். நான் &nbsp;இருப்பதால்தான் அன்புமணி என்னை வசைபாடுகிறார். அன்புமணி ஊர் ஊராக அலைந்தாலும் மக்கள் செல்வாக்கு ராம தாசுக்கு மட்டுமே உள்ளது. அன்புமணி, ராமதாசுடன் சேர்ந்த பிறகு கட்சியில் இருந்து விலகத் தயாராக &nbsp;உள்ளேன். யார், யாரை அன்புமணி துரோகி கள் என்று சொல்லி வருகிறாரோ, அவர்கள் &nbsp;எல்லோரும் விலகத் தயார். கட்சியில் இருந்து மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்யத் தயார். இவ்வாறு அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram