குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது தவறு! ஸ்டான்லி மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை
19 Nov 2025, 3:33 pm

குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது தவறு! ஸ்டான்லி மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை

சென்னை, நவ.19- பச்சிளம் குழந்தைகளுக்குக் குரல் வளம் மேம்படும் என்ற நம்பிக்கையில் கழுதைப் பால் கொடுப்பது, வயிற்று வலியைப் போக்க க்ரைப் வாட்டர் வழங்குவது போன்ற அபாயகரமான மூடநம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தை கள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவம்பர் 15 முதல் 21-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சமூக குழந்தைகள் மருத்துவ நிலை யத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பச்சிளம் குழந்தை பரா மரிப்பின் அவசியத்தை பொதுமக்க ளுக்கு உணர்த்தும் விதமாக, முக்கியத் தகவல்கள் அடங்கிய விழிப்பு ணர்வுப் பிரசுரங்களை மருத்துவ மனை டீன் அரவிந்த் வெளியிட்டார். இந்நிகழ்வில் பங்கேற்ற மருத்து வர்கள், புதிதாகப் பிரசவித்த தாய்மார்க ளின் குழந்தைப் பராமரிப்பு குறித்த சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களை அளித்தனர். தாய்ப்பால் அவசியம் மருத்துவர் கணேஷ் பேசுகையில், "குழந்தையை எப்போதும் கத கதப்பான ஆடைகளினால் நன்கு போர்த்தி வைத்திருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதை குழந்தை பிறந்தவுடன் உடனடியாகத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் (180 நாட்கள்) வரை தாய்ப்பால் மட்டுமே பிரத்தியேகமாகக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு பிறந்த மூன்று நாட்களுக்குத் தாயிடம் இருந்து சுரக்கும் சீம்பால், குறைவாக இருந்தாலும் கூட குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி யையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும் ஒரு இயற்கை தடுப்பூசி போன்றது. தாய்க்கு சத்தான உணவு குழந்தை ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தி ருந்தால், குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என்று அர்த்தம். தாய்க்கு எல்லா வகையான சத்தான உணவுகளையும் (பழங்கள், காய்கறிகள், அசைவ உணவுகள்) கொடுக்கலாம். தாயின் உணவுக்கும், பச்சிளம் குழந்தையின் மஞ்சள் காமாலைக்கும் தொடர்பு கிடையாது. பிறந்த குழந்தைகளுக்கு வைட்டமின்-டி சொட்டு மருந்து ஒரு வயது வரை கட்டாயம் கொடுக்க வேண்டும். தொப்புள் கொடி விழுந்தவுடன் குழந்தையை சுகாதாரமான முறையில் குளிக்க வைக்கலாம். தடுப்பூசி அட்டவணைப்படி அனைத்துத் தடுப்பூசிகளையும் முறையாகச் செலுத்த வேண்டும். பவுடர் பால் தராதீர் தாய்ப்பால் வரவில்லை என்று பெரியவர்கள் கூறுவதைக் கேட்டு, புட்டிப் பால், பசும் பால், பவுடர் பால் போன்ற மாற்று உணவுகளைக் கொடுக்கக் கூடாது. தாய்ப்பால் தான் குழந்தைக்கு மிகச்சரியான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் சரியான உணவு. தாய்ப்பால் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகி நிவர்த்தி செய்யலாம். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தால்… குழந்தை தாய்ப்பால் சரி யாகக் குடிக்காமல் இருப்பது, அதிகப்படியான அழுகை அல்லது சோர்வாக இருத்தல், அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் மஞ்சளாக இருப்பது, பிறந்த 48 மணி நேரத்துக்கு மேலாகச் சிறுநீர் கழிக்காமல் இருப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயி லிருந்து நுரை வருதல், குழந்தை நீல நிறமாக மாறுதல், புரை ஏறுதல், மூச்சுத் திணறல், வலிப்பு இருந்தால் உடனடியாகக் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு செய்யக்கூடாதவை

பச்சிளம் குழந்தைகளுக்குச் சளி நீங்க, வாயில் விரல் விட்டோ, மூக்கில் ஊதியோ 'சளி' எடுக்கக் கூடாது. விக்ஸ் கொண்டு தலையிலோ, மார்பிலோ தேய்ப்பதும் தவறானது. உரம் எடுக்கக்கூடாது. கற்பூர இலை, முசுமுசு இலை, பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து குழந்தையின் வாயில் ஊற்றினால் சளி போய்விடும் என்று நினைப்பது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு ஊற்றுவதால் அது புரை ஏறி நிமோனியா சளியாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும். நாக்கில் வசம்பு தடவுதல், கண் மை வைத்தல், மலம் கழிக்கவில்லை என்று முருங்கை குச்சி அல்லது வெற்றிலை காம்பை ஆசன வாயில் வைப்பது தவறு. குழந்தையின் அதீத அழுகையை கட்டுப்படுத்த பிளாஸ்டிக் சூப்பானைப் பயன்படுத்துவது, வயிற்று வலிக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.