முந்தய பக்கம்

பணி ஓய்வு விழாவில் தீக்கதிர் சந்தா வழங்கல்

2 Jul 2026, 1:50 am
பணி ஓய்வு விழாவில் தீக்கதிர் சந்தா வழங்கல்
<p><strong>பணி ஓய்வு விழாவில் தீக்கதிர் சந்தா வழங்கல்</strong></p><p>நாமக்கல், ஜூலை 1- பணி ஓய்வு விழாவில் நாமக்கல் மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் தீக்கதிர் சந்தா வழங்கினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந் தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வந்த சிஐடியு மாவட்ட துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினருமான வி.கண்ணன் பணி ஓய்வு பாராட்டு விழா செவ்வாயன்று வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுச் சாமி, கூட்டுறவு ஊழியர் சங்க கவுரவ தலைவர் எம்.ரங்க சாமி, சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவுடை நம்பி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்த னர். அப்போது எஸ்.கந்தசாமி-யிடம், வி.கண்ணன் தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்கான தொகையை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram