பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 22 பேருக்கு ரூ.5.50 லட்சம் வைப்பீடு
6 Oct 2026, 1:23 am

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 22 பேருக்கு ரூ.5.50 லட்சம் வைப்பீடு

கடலூர், அக்.5-முதலமைச்சரின் பெண் குழந்தை பாது காப்புத் திட்டத்தின் கீழ் 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பெண்குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5.50 லட்சம் வைப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திங்கள்கிழமை வழங்கினார்.

2026-27ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்திற்கு ரூ.3.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 508 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.27 கோடி வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் தலா ரூ.25 ஆயிரமும் வைப்பீடு செய்யப்படுகிறது.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.