தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்பப் பெறுக! பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவை கோரிக்கை

23 May 2026, 10:30 pm
பொதுத்துறை நிறுவனங்களில்  அந்நிய நேரடி முதலீட்டை திரும்பப் பெறுக! பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவை கோரிக்கை

பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்பப் பெறுக! பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவை கோரிக்கை

​மதுரை, மே 23- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங் கத்தின் (ஜிஐபிஏ) 26 ஆவது ஆண்டு மாநாடு பைபாஸ் ரோடு எஸ்பிஓ காலனியில் சனிக்கிழமை ஜி.ஐ.பி.ஏ தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் அலமேலு ஸ்ரீதரன் வரவேற்றார்.

பொதுச் செய லாளர் ஆர்.ராமநாராய ணன், பொருளாளர் பி. மோகன் ஆகியோர் அறிக்கை சமர்பித்தனர்.

அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் ஜே.குருமூர்த்தி சிறப்புரை யாற்றினார். எல்.ஐ.சி.பி.ஏ. பொதுச் செயலாளர்​என்.

சேகர், ஜி.ஐ.பி.ஏ. அமைப்புச் செயலாளர் எஸ்.வி.சங்கர், ஜி.ஐ.இ.ஏ, தென்னக மண் டல பொதுச் செயலாளர் எம். முத்துக்குமரன், எம்.ஆர்.ஜி.ஐ.இ.ஏ. பொருளாளர் எம்.செந்தில்நாயகம், சிஐ டியு மாநிலச் செயலாளர் இரா.லெனின், யு.ஐ.ஐ.ஓ.ஏ மண்டலச் செயலாளர் கே. விக்னேஷ்குமரன், தஞ்சை ஜி.ஐ.பி.ஏ இணைச் செயலா ளர் பி.சத்தியநாதன் ஆகி யோர் பேசினர். ஜி.ஐ.பி.ஏ துணைப் பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

தலைவராக எஸ்.பால சுப்பிரமணியன், பொதுச் செயலாளராக ஆர்.ராம் நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் எல்ஐசியில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர் களுக்கு “பென்ஷன் அப்டே ஷன்” திட்டத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இன்சூரன்ஸ் துறை யில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தேசிய பென்ஷன் திட் டம், ஒருங்கிணைந்த ஓய்வூ தியத் திட்டம் ஆகியவற்றை கைவிட்டு, அனைத்து இன்சூ ரன்ஸ் ஊழியர்களையும் 1995 ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது.

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீ மியங்களுக்கு வழங்கப் பட்ட ஜிஎஸ்டி விலக்கு, குழு மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கும் நீட்டிக்கப் பட வேண்டும் என்றும், ஓய்வூதியர்களுக்கு மாதா ந்திர மருத்துவப் படி வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டது.

ஓய்வூதி யக் கணக்கீட்டில் கடைசி 10 மாத சராசரி ஊதியத்திற்கு பதிலாக, கடைசி மாத ஊதி யமே அடிப்படையாக எடுத் துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட் டது.

மேலும், நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடெட் இந்தியா ஆகிய நான்கு அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து வலுவான ஒரே நிறுவனமாக உரு வாக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.

அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதியத் தொகைக்கு வருமான வரி விலக்கு வழங்க வேண்டும், கோவிட் காலத்தில் நிறுத் தப்பட்ட மூத்த குடிமக்க ளுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.