சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி
3 Jul 2026, 11:35 pm
<p><strong>சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி</strong></p><p>செஞ்சி, ஜூலை 4- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களுக்குச் சாக்லேட் வழங்கினார். அதனைச் சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்குத் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.</p>
