மண்ணைத் தின்னும் குரங்குகள்
16 May 2026, 8:16 pm

மண்ணைத் தின்னும் குரங்குகள்

சுற்றுலாப் பயணிகள் தரும் அல்லது திருடிச் செல்லும் உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள விரைவு உணவுகளால் பாதிக்கப்பட்ட வயிற்றின் கார அமில சமநிலையை சரிசெய்ய ஜிப்ரால்ட்டர் பாறையில் வாழும் வாலில்லாத பார்பரி மக்காக்ஸ் (Barbary macaques) குரங்குகள் மண் தின்னப் பழகிக்கொண்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விரும்பி மண் உண்ணும் இப்பழக்கம் ஜியோஃபாஜி (geophagy) என்று அழைக்கப்படுகிறது. ஜிப்ரால்ட்டர் (Gibraltar) என்ற இடம் ஐரோப்பாவில் ஐபீரியன் (Iberian) தீபகற்பத்தின் தென் கோடியில் ஸ்பெயின் எல்லையில் ஜிப்ரால்ட்டர் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பு. விடுமுறை நாட்களில் பயணிகளிடம் அதிகத் தொடர்பு உள்ள குரங்குகள் மண்ணை அதிகமாகத் தின்கின்றன. இங்கு தனித்துவம் நிறைந்த எட்டு குழுக்களாக 230 குரங்குகள் வாழ்கின்றன.

ஐஸ்க்ரீம் சாப்பிடும் குரங்குகள்

உள்ளூர் அதிகாரிகள் பழங்கள், காய்கறிகள், விதைகளை இவற்றிற்கு தருகின்றனர். என்றாலும் பயணிகள் வறுவல் பொட்டலங்கள், சாக்லேட் கட்டிகள் முதல் எம்ஸ் (M’s) என்ற கம்பெனியின் விரைவு உணவுகள், ஐஸ்க்ரீம்கள் வரை பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தருகின்றனர். உற்றுநோக்கல்கள் மூலம் குரங்குகள் ஏன் மண் தின்கின்றன என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும் இது அவற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பயணிகளிடம் இருந்து தனித்துவிடப்பட்ட குரங்குகளிடம் இப்பழக்கம் காணப்படுவ தில்லை. “உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள விரைவு உணவுகளால் பாதிக்கப்பட்ட குடல் செரிமானத் தொகுப்பில் வாழும் நுண்ணுயிரிகளை மறு சமநிலை செய்யவே குரங்குகள் இவ்வாறு செய்கின்றன. மண்ணில் உள்ள பாக்டீரியா மற்றும் தாதுப்பொருட்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை மறு ஒழுங்கமைவு செய்ய உதவுகின்றன. எதிர்மறை விளைவுகளை தடுக்கின்றன.

பயணிகள் தரும் உணவுகளால் பாதிக்கப்பட்ட குரங்குகள் மண்ணை இரு மடங்கு உண்கின்றன. மண்ணிற்கு குடல் செரிமானத்திற்கு உதவும் பண்பு உள்ளது. 2022 கோடைகாலத்திற்கும் 2024 வசந்த காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட உற்றுநோக்கல்கள் குரங்குகள் உண்டதில் ஐந்தில் ஒரு பங்கு சுற்றுலாப் பயணிகள் கொடுத்த விரைவு உணவுகளே என்று கூறுகிறது. உப்பு போட்ட வறுத்த கடலை, சாக்லெட் கட்டிகள், மொறுமொறுப்பு தின்பண்டங்கள், உலர்ந்த பாஸ்தா மாவு, தண்ணீர் மற்றும் சில நேரங்களில் முட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு, ரொட்டிகள், கோக்கோ கோலா, ஆரஞ்சு ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்றவை பயணிகளால் குரங்குகளுக்குக் கொடுக்கப்படும் சில வகை உணவுகள். மளிகைப் பொருட்கள் சுற்றப்பட்ட தாள்கள் அவற்றிற்கு மிகப் பிடித்தமானவை. பழரசம் கலந்த குளிர்பானங்கள் அவற்றிற்குப் பிடிக்காத பொருள்” ” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குரங்குகள் நடத்தை சூழலியலாளர் டாக்டர் சில்வேய்ன் லெமாய்ன் (Dr Sylvain Lemoine) கூறுகிறார். 44 குரங்குகள் விரைவு உணவுகள் உண்பதை விஞ்ஞானிகள் 46 தடவை ஆவனப்படுத்தியுள்ளனர். ஐஸ்கிரீம், பிஸ்கட், ரொட்டிகளை உண்ட பின் குரங்குகள் உடனே மண்ணை உண்டன. வருகையாளர்கள் குறைவாக உள்ள குளிர்காலத்தில் அவை விரைவு உணவுகளை 40% குறைவாகப் பெறுகின்றன.

அந்த சமயத்தில் அவை 30% குறைவாக மண்ணை உண்கின்றன. சயண்ட்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) என்ற இதழில் வெளிவந்துள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரையில் இவை மண் தின்னும் பழக்கத்தை மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு கற்றுக்கொண்டன என்பதை விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர். குரங்குகளின் கூட்டத்தைப் பொறுத்து அவை உண்ணும் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. பெரும்பாலானவை செம்பழுப்பு அல்லது செம்மண்ணை உண்கின்றன.

மண் உண்ணும் பழக்கம்

ஆனால் தீபகற்பத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் வாழும் குரங்குகள் சாலைப் பள்ளங்களில் இருக்கும் தார் கலந்த மண்ணை உண்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்கள் மண்ணை உண்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், ஆசியா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள கருவுற்ற பெண்கள் குமட்டலைத் தடுக்க, தாதுக்களைப் பெற மண் உண்கின்றனர். ஆனால் கருவுற்றிருக்கும்போது குரங்குகள் அதிக மண்ணை உண்பதில்லை. கருவுற்றிருக்கும்போது சத்துகளை அதிகம் பெற இவை மண்ணை உண்பதில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. “உயர்ந்த ஆற்றல், குறைந்த நார்சத்து, சில குரங்கினங்களில் செரித்தலை பாதிக்கும் விரைவு உணவுகளை உண்பதால் ஏற்படும் நுண்ணுயிரிகளின் சமநிலையை சரிசெய்ய இவை மண் உண்கின்றன. குரங்குகளைத் தொடவோ உணவளிக்கவோ கூடாது என்று ஜிப்ரால்ட்டரில் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படு வதில்லை.

விரைவு உணவுகள் போலவே இவை வாழும் பகுதிக்கு அருகில் ஒவ்வொரு நாளும் ஏராளமான வாகனங்கள் செல்லும் சாலை இருப்பதால் இவை உண்ணும் மண்ணும் இவற்றிற்கு தீங்கு செய்கிறது. இந்த மண்ணில் உள்ள மாசுப்பொருட்கள் பற்றி ஆராயப்படும்” என்று சில்வேய்ன் லெமாய்ன் கூறுகிறார்.

“நச்சுகளை அகற்றுவதற்கும் தாதுப்பொருட்களை அதிகமாகப் பெறவும் மண் விரும்பி உண்ணப்படுகிறது. தென்னாப்பிரிக்க சாம்பல் நிற பஃப்ஃபூன் (chacma baboon) குரங்குகள் தாவர நச்சுகளை அகற்ற மண்ணை உண்கின்றன. சுற்றுலாப் பயணிகள் தரும் உணவுகளால் உண்டாகும் கேடுகளை சமாளிக்க அவை இவ்வாறு செய்யலாம் என்று நம்பப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் ஜப்பான் அரஷியாமா குரங்கு பூங்காவில் (Arashiyama Monkey Park) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் வயிற்றில் ஏற்படும் கார அமில சமநிலை பாதிப்பை சமாளிக்க குரங்குகள் மண் தின்கின்றன என்றாலும் மனிதர்கள் தரும் உணவுகளால் இந்த உயிரினங்களுக்கு உண்டாகும் தீமைகள் குறைக்கப்பட வேண்டும். முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்” என்று யு எஸ் டெக்சாஸ் சாண் ஆண்டோனியோ (San Antonio) பல்கலைக்கழக குரங்குகள் ஆய்வாளர் டாக்டர் போலா பெஃப்ஸ்வொர்த் (Dr Paula Pebsworth) கூறுகிறார். நாய், பூனை, காகம் போன்ற ஒரு சில உயிரினங்களுக்கு உணவு கொடுப்பது தவறானதே. ஆனால் அவை நம்மால் இந்தப் பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்டுவிட்டன. இதை எல்லா உயிரினங்களுக்கும் நாம் பின்பற்றக்கூடாது என்பதை இந்த ஆய்வு நமக்கு