ராட்சத குடிநீர் குழாயில் உடைப்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு</strong></p>
<p>கோவை, நவ.14- சரவணம்பட்டி பகுதியில் ராட்சத பாதாள குடிநீர் குழா யில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலைகளில் குளம் போல தேங்கியது. கோவை – சக்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் வெள்ளியன்று ராட்சத பாதாள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய லட்சக் கணக்கான லிட்டர் குடிநீர் சாலையை மூழ்கடித்து, அரு கிலுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பலர் தங்கள் பொருட்களை மீட்க முடியாமல் தவித்தனர். இப்பகுதி மாநகரின் முக்கிய சந்திப்பாக இருப்பதால், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து வரும் வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குழாயை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்த ஜேசிபி வாகனம், உடைந்த பகுதியில் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதனால் ஜேசி பியை மீட்கவே நீண்ட நேரம் போராட வேண்டியிருந் தது. பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து குழாயை அடைத்து சரிசெய்யும் பணி யில் ஈடுபட்டனர். இருப்பினும், முழு சீரமைப்புப் பணி மாலை வரை நீடித்தது. இப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத குழாயை முறையாக பராமரிக்க தவறியதா லேயே இத்தகைய விபத்து ஏற்பட்டது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், குடிநீர் விநி யோகத்தை சீராக்</p>
<p> </p>
