தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகரில் ராட்சத ஜெட்-ராடர் மூலம் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கம்

14 Feb 2026, 4:33 pm
விருதுநகரில் ராட்சத ஜெட்-ராடர் மூலம் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கம்
<p><strong>விருதுநகரில் ராட்சத ஜெட்-ராடர் மூலம் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கம்</strong></p> <p>விருதுநகர், பிப்.14- விருதுநகரில் நவீன ராட்சத &nbsp;ஜெட்-ராடர் வாகனம் மூலம் பிர தான சாலைகளில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் நகராட்சி பகுதியில் &nbsp;கடந்த 2007 முதல் பாதாளச் சாக் &nbsp;கடை அமைக்கும் பணி தொடங்கப் பட்டது. நீண்டகாலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்ற இந்த பணி, கடந்த 2017 இல் நகராட்சி வசம் ஒப்ப டைக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடை பெற்று வருகிறது. சுமார் 12 ஆயி ரம் வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை &nbsp;இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது தொட்டிகளில் ஏற்படும் அடைப்பு களை நீக்க விருதுநகர் நகராட்சி யில் 2 ஜெட்-ராடர் வாகனம் இருந் &nbsp;தது. மேலும் தேங்கும் மணல் மேடு களை அகற்ற 2 ஆட்டோக்களும் வாங்கப்பட்டன. பழைய ஜெட்-ராடர் வாகனம் பழுது ஏற்பட்டதால் பாதாளச் சாக் &nbsp;கடை தொட்டிகளில் மண் அதிகமா கியது. இதனால் கட்டையாபுரம், பாத்திமாநகர், தெற்குரதவீதி, கிருஷ்ணமாச்சாரி சாலை, புல்ல லக்கோட்டை சாலை, ராமமூர்த்தி சாலை ஆகிய பிரதான சாலை களில் அடைப்பு ஏற்பட்டது. அடைப்புகளை அகற்றும் பணி &nbsp;பெரும் சவாலாக மாறியது. குடி யிருப்புகளுக்குள் சாக்கடை நீர் &nbsp;புகுந்தது. பல இடங்களில் குடிநீரு டன் கழிவுநீர் கலந்து வந்தது. இதையடுத்து நடைபெற்ற நகர் &nbsp;மன்றக் கூட்டங்களில் அப்பகுதி கவுன்சிலர்கள் பெரும் போராட் டங்களை நடத்தினர் &nbsp; எனவே, கோவையில் உள்ள &nbsp;நவீன ராட்சத ஜெட்-ராடர் வாக னத்தை நகராட்சி நிர்வாகம் வர வழைத்தது. இந்த வாகனம் 8 &nbsp;மீட்டர் ஆழத்தில் இருக்கும் மண், &nbsp;சிறிய கற்கள், சேறு மற்றும் சகதி களை கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே கொண்டு வருகிறது. மேலும் பாதாளச் சாக்கடை குழாய்க்குள் லாவகமாகச் சென்று &nbsp;அடைப்புகளையும் நீக்கி வரு கிறது. இதற்கு நாளொன்றுக்கு ரூ. 60 ஆயிரம் வரை வாடகை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் தானியங்கி முறை யில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் புல்லலக்கோட்டை சாலை, புளுகணூரணி சாலை, காமராஜர் பைபாஸ் சாலை, மல்லாங்கிணறு சாலை, ராமமூர்த்தி சாலை ஆகிய பகுதிகளில் இருந்த நீண்டகால அடைப்புகள் நீக்கப்பட்டன. இத னால் பொதுமக்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பெரும் நிம்ம தியடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு, விருது நகர் நகராட்சிக்கு புதிய ராட்சத ஜெட்-ராடர் வாகனம் ஒன்றை வழங் &nbsp;கிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.