தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்துக! மானாமதுரை நகர்மன்ற தலைவரிடம் சிபிஎம் மனு அளிப்பு

21 Nov 2025, 2:51 pm
மக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்துக! மானாமதுரை நகர்மன்ற தலைவரிடம் சிபிஎம் மனு அளிப்பு
<p><strong>மக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்துக! மானாமதுரை நகர்மன்ற தலைவரிடம் சிபிஎம் மனு அளிப்பு&nbsp;</strong></p> <p>சிவகங்கை, நவ.21- &nbsp;சிவகங்கை மாவட்டம் மானா மதுரை நகராட்சி &nbsp;பகுதிகளில் நாய் கள்,மக்களை அச்சுறுத்தி வரு கின்றன.இதனை அப்புறப்படுத்த &nbsp;வேண்டும் என்று &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மானாமதுரை நகர்மன்ற தலை வடர் மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் கோ பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது. மானாமதுரை நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் நாய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். நாய்க ளால் விபத்துகளும் ஏற்படுகிறது. நாய்க்கடிக்கு ஆளாகி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் . நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டி ருக்கிறது.இதனால் நாய்களை ஒழுங்குபடுத்த வேண்டும் .இந்த நாய்களை நகராட்சி நிர்வாகம் &nbsp;அப்புறப்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. &nbsp;நகர்மன்ற தலைவர் கூறுகை யில், &nbsp;ஏற்கனவே ஒரு நாய்க்கு ரூ.250 வீதம் கொடுத்து நாய்களை பிடித்தோம். நாய்களை வெளி யிலே கொண்டு போய் விடுவ தற்கான ஏற்பாடுகள் செய்தோம் .ஆனால் &nbsp;வேறு ஊர்களில் நாய்கள் இங்கு வந்து பெருகிவிட்டது . அதி காரிகளுடன் கலந்து பேசி இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.