விளையாடு
21 Jun 2026, 10:15 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற ‘குரூப் இ’ பிரிவுக்கான ஆட்டம் கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. தனது முதல் லீக் ஆட்டத்தில் குராசோ அணியை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தியதால், ஐவரி கோஸ்ட் அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என ஜெர்மனி அணி அசால்ட்டாக களமிறங்கியது. ஆனால் ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் (பிராங்க்) ஐவரி கோஸ்ட் கோலடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 65ஆவது நிமிடம் வரை ஜெர்மனி பதிலுக்கு கோலடிக்கவில்லை. இதனால் மைதானத்தில் குவிந்து இருந்த ஜெர்மனி ரசிகர்கள் தோல்வி பயத்தில் இருக்கையில் அமராமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டேனிஸ் கோலடித்தார். 90ஆவது நிமிடம் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் முழுநேர உதிரி நேரத்தில் (90+4’) ஜெர்மனி வீரர் டேனிஸ் மேலும் ஒரு அதிரடி கோல் அடித்தார். இது மிகவும் தந்திரமாக, கண் இமைக்கும் நேரத்தில் விளாசப்பட்ட சூப்பர் கோலாகும். இதன்மூலம் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியை ருசித்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்து இன்றைய ஆட்டங்கள்

நியூசிலாந்து - எகிப்து (குரூப் ஜி) நேரம் : காலை 6.30 மணி இடம் : வான்கூவர் , கனடா அர்ஜெண்டினா - ஆஸ்திரியா (குரூப் ஜே) நேரம் : இரவு 10:30 மணி இடம் : டல்லாஸ், அமெரிக்கா பிரான்ஸ் - ஈராக் (குரூப் ஐ) நேரம் : அதிகாலை 2:30 மணி இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா நார்வே - செனகல் (குரூப் ஐ) நேரம் : அதிகாலை 5:30 மணி இடம் : நியூஜெர்சி, அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

உலகக்கோப்பையுடன் வைரலாகும் பாண்டிச்சேரி ‘செல்வி அம்மா’

பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் செல்வி அம்மாள். கணவனைப் பிரிந்த பெண் ஒருவர் கால்பந்து வீரர்களுக்கான ஜெர்ஸியை (டி ஷார்ட்) விற்று வருகிறார். ஆனாலும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியை அர்ஜெண்டுனா லெஸ்ஸி, ஸ்பெயின் நட்சத்திர வீரர் லாமின் யமாலை லஷ்மி அம்மாள், போர்ச்சுக்கல் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால் டோவை நரோடா எனவும், இங்கிலாந்து முன்னாள் நட்சத்திரம் பெக்காமை பிகாம் எனக் கூறி டி ஷார்ட்க்களை விற்றுள்ளார். டிஷார்ட் வாங்க சென்ற ஒரு நபர் வீடியோ எடுத்து இதனை நக்கலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஆனால் இன்று உலகக்கோப்பையுடன் வைரலா கும் அளவிற்கு பாண்டிச்சேரி ‘செல்வி அம்மா’ உயர்ந்து விட்டார். உலகக்கோப்பை வீடியோக்களுடன் செல்வி அம்மாவும் டிரெண்டிங்கில் உள்ளார். குறிப்பாக லாமின் யமாலை லஷ்மி அம்மாள் என்றதுதான் உலகப்புகழ்ப் பெற்றதாக மாறியுள்ளது. இத்தாலியின் மிகவும் புகழ் பெற்ற கால்பந்து கிளப்பான ஜுவென்டஸ் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வைரலான செல்வி அம்மாளின் ஆடியோவைப் பயன்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டுள்ளது. இது தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் புள்ளியை வென்று குராசோ சாதனை

அமெரிக்காவின் கேன்சாஸ் நகரில் ஞாயிறன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் ஈகுவடார் - குராசோ (குரூப் இ) அணிகள் மோதின. இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. ஈகுவடார் கோலடிக்க கடுமையாக தாக்குதல் நடத்தியது. ஆனால் குராசோ தடுப்பாட்டத்தில் தூள் கிளப்பியது. குறிப்பாக குராசோ கோல் கீப்பர் ரூம், ஈகுவடார் வீரர்களின் அனைத்து வகையான தாக்குதல்களையும் கம்பீரமாக முறியடித்தார். கிட்டத்தட்ட 15 முக்கிய கோல் வாய்ப்புகளை தடுத்து அவர் பிரமிக்க வைத்தார். ஆட்டத்தின் 90 நிமிடமும் தடுப்பாட்டத்திலேயே முடிந்து போனது. இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்ட நிலையில், கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக களமிறங்கி, முதல் புள்ளியை பெற்று தனக்கென்று ஒரு வரலாறு படைத்தது குராசோ நாடு. இந்த பெருமையை கோப்பையை வென்றது போல குராசோ ரசிகர்கள் கொண்டாடினர். (குறிப்பு : விளையாட்டு மைதானங்களில் உச்சரிப்பின் அடிப்படையில் குரோரா மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

உலக சாதனை படைத்த குராசோ கோல்கீப்பர்

அனுபவ அணிகளில் ஒன் றான ஈகுவடார் கோலடிக்க கடுமையாக தாக்குதல் நடத்திய போதிலும், குராசோ கோல் கீப்பர் ரூம் தனியாளாக 15 கோல்களை தடுத்து, ஆட்டநாயகன் விருதை பெற்றார். ரூமிற்கு உலக முழுவதும் பாராட்டுகள் குவிந்தாலும், அவர் நூலிழையில் உலகசாதனையை தவறவிட்டுளார். காரணம் 2014ஆம் உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்திற்கு எதிராக 16 கோல்களைத் தடுத்த அமெரிக்கா வின் முன்னாள் கோல்கீப்பர் டிம் ஹோவார்டின் சாதனையே ஒட்டு மொத்த உலகக்கோப்பை வரலாற்றில் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை வெறும் ஒரு கோல் தடுப்பு மூலம் தவறவிட்டுள்ளார் குராசோ ரூம். 90 நிமிட சாதனை எனினும் ஹோவார்டின் சாதனை கூடுதல் நேரம் உட்பட 120 நிமிட ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட உலகக்கோப்பை போட்டியில் மிக அதிக கோல்களைத் தடுத்த புதிய உலக சாதனையை ரூமின் இந்த 15 தடுப்புகள் படைத்துள்ளன. வெறும் 1.60 லட்சம் மக்கள் தொகை கொண்ட கரீபியன் தீவு நாடான குராசோவின் கோல் கீப்பர் உலக சாதனை படைத்தது இருப்பதும், முதல் தொடரிலேயே முதல் புள்ளியை பெற்றிருப்பதும் கால்பந்து உலகில் அந்த அணிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துனிசியாவை பந்தாடிய ஜப்பான்

குரூப் எப் பிரிவின் லீக் ஆட்டத்தில் துனிசியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மெக்சிகோவில் நடைபெற்றது. ஆட்டத்தின் 4ஆவது நிமிடம் (டைச்சி) முதலே கோல் கணக்கை துவங்கிய ஜப்பான் அணி பிரம்மாண்டமாக ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பான் வீரர் ஆயாசீ 31ஆவது நிமிடத்தில் கோலடிக்க முதல் பாதியில் ஜப்பான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆம் பாதியின் 69ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜூன்யோ கோலடித்தார். அடுத்த 14 நிமிட இடைவெளியில் ஆயாசீ (83’) மீண்டும் ஒரு கோலடிக்க, ஆட்டநேர முடிவில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்றதால் துனிசியா அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதுவரை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நாடுகள்

1. மெக்சிகோ (குரூப் ஏ) 2. அமெரிக்கா (குரூப் டி) 3. ஜெர்மனி (குரூப் இ) வெளியேறிய நாடுகள் 1. ஹைத்தி (குரூப் சி) 2. துருக்கி (குரூப் டி) 3. துனிசியா (குரூப் எப்)