தீக்கதிர் உலக செய்திகள்
11 Nov 2026, 8:54 pm

தீக்கதிர் உலக செய்திகள்

சீன டிரோன்கள் : ஜெர்மனி ராணுவம் தடை

பயிற்சிப் பணிகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் சீனத் தயாரிப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதற்கு ஜெர்மனி ராணுவம் தடை விதித்துள்ளது. அவற்றுக்குப் பதிலாகஉள்நாட்டு மற்றும் ஐரோப்பிய தயாரிப்பு டிரோன்கள் பயன்படுத்தப்படும் என ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ராணுவப் பயிற்சிகள், பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் குறித்த முக்கியத் தகவல்களை இந்த டிரோன்கள் சீன உளவுத்துறைக்குக் கொடுத்துவிடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உளவு அமைப்புகள் அரசியல்மயம்: ஜனநாயகக் கட்சி விசாரணை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டின் உளவு அமைப்புகளை அரசியல்மயமாக்கியதாகவும், அவற்றின் கட்டமைப்பைச் சிதைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த

ஜனநாயக கட்சியினர்தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இடைக்கால தேர்தலில் அக்கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். 2027 ஜனவரி மாதம் அவர்கள் பதவி ஏற்றபிறகு பல அரசு குழுக்களுக்கு தலைமை பொறுப்பும் அவர்களிடம் செல்லும் நிலையில் இவ்விசாரணைக்கு அக்கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.