ஜார்ஜ் ஜோசப்பிற்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
5 Jun 2026, 8:19 pm
<p><strong>ஜார்ஜ் ஜோசப்பிற்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை</strong></p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்படுவதற்காக போராடிய பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில் மதுரையில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசனிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். மதிபாரதி, மாவட்டச் செயலாளர் ஆ. பாலமுருகன், தெற்கு பகுதி செயலாளர் அ. போனிபேஸ் உள்ளிட்டோர் மனு அளித்தனர். </p>
