முந்தய பக்கம்

பொது வேலை நிறுத்தம் பிரச்சார கூட்டங்கள்

8 Feb 2026, 3:55 pm
 பொது வேலை நிறுத்தம் பிரச்சார கூட்டங்கள்
<p><strong>&nbsp;பொது வேலை நிறுத்தம் பிரச்சார கூட்டங்கள்</strong></p> <p>ஒன்றிய அரசுக்கு எதிராக பிப்.12 அன்று தொழிற்சங்கங்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை விளக்கி சனிக்கிழமையன்று (பிப்.8) மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆலந்தூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் கே.மோகன்ஜி தலைமையில் &nbsp;மாநிலச் செயலாளர் கே.சி.கோபிக்குமார் பேசினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், செயலாளர் ஜி.செந்தில்குமார், மாநிலக்குழு உறுப்பினர் எச்.வசந்தி மற்றும் கே.வி.சிவக்குமார், கருணாகரன் (ஆட்டோ), ஜி.ஜெயராமன் (முறைசாரா), சீனிவாசன், சந்திரன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் பேசினர்.</p> <p>சிஐடியு வில்லிவாக்கம் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சனிக்கிழமையன்று &nbsp;(பிப்.7) வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையம் அருகே பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.மனோகர் தலைமையில் நடை பெற்ற இந்த பிரச்சாரத்தில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கே.திருசெல்வன், மத்தியசென்னை மாவட்ட துணைத் தலைவர் பா.ராஜா ராமன், சி.மார்ட்டின் (கட்டுமான சங்கம்), எஸ்.மனோன்மணி (மாற்றுத்திற னாளிகள் சங்கம்), நடராஜன் (ஐசிஎப் யுடபுல்யு), எம்.சி.ஆபிரகாம் தாமஸ் (ஆட்டோ சங்கம்), பி.பூமணிமாணிக்கம் (சாலை போக்குவரத்து சங்கம்), யூஜின் பர்க் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram