ஐசிடிஎஸ் திட்டத்தை பாதுகாத்திடுக: அங்கன்வாடி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வலியுறுத்தல்
11 Jan 2026, 7:00 am

புதுச்சேரி,ஜன.11- வளர் இளம் தலைமுறைக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கும் ஐசிடிஎஸ் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு தோழர் சி.எச். பாலமோகனன் திடலில் உள்ள தோழர் விஜயலட்சுமி நினைவு அரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:-

இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு இளம் தலைமுறையினரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்தான உணவு வழங்குவதற்காக கிராமப்புறங்களில் அங்கன்வாடிகள் துவக்கப்பட்டது.அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உத்திரவாதப்படுத்தும் உன்னத பணியாக இன்றைக்கும் விளங்கி வருகிறது. 28 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பணியாளர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளை பாதுகாக்க குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ஐ சிடிஎஸ் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அங்கன்வாடி ஊழியர் சங்க தமிழ் மாநில பொதுச் செயலாளர் தேவமணி,அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவரவத் தலைவர் பிரேமதாசன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி, அரசு ஊழியர் சங்க காரை பிரதேச செயலாளர் ஷேக் அலாவுதின் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டு வேலை அறிக்கையை சங்க பொதுச் செயலாளர் தமிழரசி வாசித்தார். பொருளாளர் செல்வராணி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். திரளான அங்கன்வாடி ஊழியர்கள் பணியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

தீர்மானம்

ஏழாவது ஊதியக் குழு பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 25 விழுக்காடு பதவி உயர்வு. 6 வது ஊதியக்குழுவில் உதவியாளர்களுக்கு 50 விழுக்காடு நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும். போனஸ் நிலுவைத் தொகை மற்றும் பணியில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு தலைவராக தமிழரசி, செயல் தலைவராக ராஜலட்சுமி, செயலா ளராக லலிதா, பொருளாளராக செல்வ ராணி உள்ளிட்ட 16 பேர் கொண்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.